தமிழ்நாடு பாணியில் கர்நாடகா.. தலித்துகளில் உள் இடஒதுக்கீடு வழங்க தயார்: சித்தராமையா பரபர அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகாவிலும் தமிழ்நாட்டைப் போல தலித் பிரிவினரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அண்மையில் தலித், பழங்குடிகள் பிரிவில் மாநில அரசுகள் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமது ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கினார். இதேபோல பஞ்சாப், ஹரியானா மாநில அரசும் தலித்துகள்- பழங்குடிகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கின.

இதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தலித்- பழங்குடி பிரிவுகளின் இடஒதுக்கீட்டில் ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. அதேநேரத்தில் தலித்- பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலான கிரீமிலேயரையும் அமல்படுத்த யோசனை தெரிவித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அருந்ததியருக்கான 3% உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அரசும் தலித் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. பெங்களூரில் தமது இல்லத்தில் மாதிக ஜாதி பிரதிநிதிகளை முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார். அப்போது, தமது அரசு தலித் ஜாதிகளில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தயாராக உள்ளது; உச்சநீதிமன்றமும் அண்மையில் மாநில அரசுகளுக்கு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்திருக்கிறது. இதனடிப்படையில் காங்கிரஸ் அரசு, உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்தார்.
மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும். இதன் பின்னர் தலித் உள் இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாணியில் கர்நாடகா!
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications