முடா ஊழல்: லோக் ஆயுக்தா போலீசில் ஆஜர்- சித்தராமையாவிடம் 2 மணிநேரம் கிடுக்குப் பிடி விசாரணை!
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
முடா என்பது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமாகும். இந்த முடா அமைப்பானது முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது.

முதல்வர் சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டவிரோதம் என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநரும் அனுமதி அளித்தார். இந்த அனுமதிக்கு எதிராக சித்தராமையா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சித்தராமையா மீது அம்மாநில லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் விசாரணைக்கு ஆஜராக சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சித்தராமையா நேற்று ஆஜரானார்.
முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது மொத்தம் 40 கேள்விகள் சித்தராமையாவிடம் கேட்கப்பட்டன. லோக் ஆயுக்தா எஸ்பி உதேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த விசாரணையை நடத்தியது.
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். லோக் ஆயுக்தா போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். என்னுடைய பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. அடுத்த விசாரணை குறித்து எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications