பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநாடுகள் போடாதீங்க... மோடி மீது நம்பிக்கை வையுங்க... லிங்காயத் மடாதிபதிகளுக்கு எடியூரப்பா அப்பீல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: தாம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மாநாடுகள் நடத்துவதை கைவிட வேண்டும் என்று லிங்காயத் மடாதிபதிகளுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    Political Journey Of B.S. Yediyurappa | Karnataka CM Resign | Explained

    கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்பட இருக்கிறார். இன்று மாலைக்குள் எடியூரப்பா பதவியில் தொடருவாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

    கர்நாடகாவின் புதிய முதல்வராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்படக் கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே எடியூரப்பாவுக்கு ஆதரவாக அவர் சார்ந்த லிங்காயத் சமூகம் திரண்டுள்ளது.

    நெருங்கிவரும் காங்கிரஸ்..தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி..மம்தாவின் அட்டகாசமான வியூகம்நெருங்கிவரும் காங்கிரஸ்..தேசியளவில் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி..மம்தாவின் அட்டகாசமான வியூகம்

    மடாதிபதிகள் மாநாடு

    மடாதிபதிகள் மாநாடு

    பெங்களூருவில் இன்று லிங்காயத் மடாதிபதிகள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

    டெல்லி தகவல்

    டெல்லி தகவல்

    இதனிடையே பெல்காம் பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார் எடியூரப்பா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பெங்களூரு சென்று சேரும் போது கட்சி மேலிடத்தில் இருந்து எனக்கு தகவல் வரும் என எதிர்பார்க்கிறேன். அந்த தகவலின் அடிப்படையில் செயல்படுவேன்.

    மடாதிபதிகளுக்கு வேண்டுகோள்

    மடாதிபதிகளுக்கு வேண்டுகோள்

    எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடுகளை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்திருப்போம். டெல்லி மேலிடம் தெரிவிக்கும் முடிவுக்குப் பின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்போம் என்றார்.

    தலித் முதல்வரா?

    தலித் முதல்வரா?

    கர்நாடகாவின் புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், யார் முதல்வர் என்பது குறித்து நான் முடிவு எடுக்க முடியாது என்றார்.

    English summary
    Karnataka CM Yediyurappa has urged that the Lingayat seers should stop conventions for his support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X