பெண்ணுடன் பெட்ல.. அப்போ போய்.. எடியூரப்பாவை கோர்த்துவிட்ட ரமேஷ் ஜார்கிகோலி.. வெடித்த "வேறு சர்ச்சை"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இளம்பெண்ணுடன் கெஸ்ட் ஹவுஸில் புரண்டதோடு மட்டுமல்லாது, முதல்வர் எடியூரப்பா பெயரை கோர்த்து விட்டுள்ளார் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி.

மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கர்நாடக அரசு கெஸ்ட் ஹவுஸில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோலி. இப்போது அந்த பெண்ணை அமைச்சர் மிரட்டுவதால் ரகசியமாக பதிவு செய்த வீடியோவை சமூக ஆர்வலர் மூலமாக வெளியிட்டுள்ளார் அப்பெண்.

இந்த வீடியோ வெளியானது முதல் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதையடுத்து தனது அமைச்சர் பதவியை இன்று ரமேஷ் ஜார்கிகோலில ராஜினாமா செய்தார்.

பாலியல் சர்ச்சைகள்

பாலியல் சர்ச்சைகள்

எடியூரப்பா அரசில் அமைச்சராக பதவி வகித்த பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது. சட்டசபையின் உள்ளே செல்போனில் முன்பு ஒரு முறை, மூன்று அமைச்சர்கள் ஆபாசப் படம் பார்த்த விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இப்போது.. சமீபத்தில்.. எடியூரப்பா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாகவும், அந்த வீடியோ சிடி பாஜக பிரமுகர்கள் பலர் கைகளில் இருப்பதாகவும் அதை காட்டி மிரட்டி தான் பலரும் அமைச்சர் பதவியை பெற்றதாகவும் பாஜகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

பரபர வீடியோ

பரபர வீடியோ

இப்படி தொடர்ந்து ஆபாச பிரச்சினைகளில் கர்நாடக பாஜக சிக்கி வருகிறது. அது ஒரு பக்கம் இருந்தால், இளம்பெண்ணுடன் ஓட்டலில் நெருக்கமாக இருந்தபோது, பெண்ணுடன் அமைச்சர் பேசியது ஆடியோவாக வெளியாகி உள்ளது. அதில் எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி என்று ரமேஷ் ஜார்கிகோலி கூறுகிறார்.

கன்னடர்கள் பற்றி விமர்சனம்

கன்னடர்கள் பற்றி விமர்சனம்

இதோ அந்த உரையாடல்: பெண் பேசுவது: பெல்காம் பகுதியில் மராட்டியர்களும் கன்னடர்களும் நிறைய சண்டை போட்டுக் கொள்கிறார்களே. ரமேஷ் ஜார்கிகோலி: "மராத்தியர்கள் நல்லவர்கள். ஆனால்.." என்று கூறி கன்னடர்கள் பற்றி கெட்ட வார்த்தையில் ஒரு கன்னட வார்த்தையை உச்சரித்து உள்ளார். "கன்னடர்களுக்கு வேறு வேலையே கிடையாது" என்றும் தெரிவித்துள்ளார்.

உரையாடல் விவரம்

உரையாடல் விவரம்

ரமேஷ் ஜார்கிகோலி: "சித்தராமையா நல்ல மனிதர். எடியூரப்பா நிறைய ஊழல் செய்துள்ளார்"

பெண்: "எப்போதுமே டெல்லிக்கு போகிறீர்கள்.. முதல்வராக வாய்ப்பு இருக்கா" என்று கேட்கிறார்.

ரமேஷ் ஜார்கிகோலி: "பிரகலாத் ஜோஷி முதல்வராக வருவார்" என தெரிவித்துள்ளார். இப்படி போகிறது ஆடியோ பதிவு.

டி.கே.சிவகுமார் கிண்டல்

டி.கே.சிவகுமார் கிண்டல்

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், இது வெறுமனே பாலியல் வீடியோ கிடையாது. முதல்வர் எடியூரப்பா ஒரு ஊழல் பேர்வழி என்று அமைச்சர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பாஜக கரை படியாத கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கண்டிப்பாக இந்த விஷயத்தில் நல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன், என்றார் சிரித்தபடி. இதன் மூலம், ஆபாச சிடி என்ற வகையில் மட்டுமின்றி, ஊழல் சிடி என்ற வகையில் வேறு மாதிரி உருவெடுத்துள்ளது இந்த பிரச்சினை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+