"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி
பெங்களூர்: கல்லூரியில் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் காதலைக் கூறியிருக்கிறார். அந்த மாணவி இதனால் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவரை மிரட்டும் வகையிலும் பேசியுள்ளார். இதையடுத்து மற்ற மாணவர்கள் எல்லாரும் சேர்ந்த அந்த பேராசிரியருக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
எப்போதும் ஆசிரியர்களே மாணவர்களை வழிநடத்துவார்கள். பல மாணவர்கள் ஆசிரியர்களால் புதிய உயரத்தை அடைந்துள்ளனர். அதேநேரம் சில ஆசிரியர்கள், மாணவர்களிடமே முறைகேடாகவும் அத்துமீறியும் நடந்து கொள்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடகா சம்பவம்
கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ஸ்ரீ சித்தார்த் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு ப்ரோபோஸ் செய்திருக்கிறார். அதுவும் கல்லூரி நடக்கும்போதே, அந்த உதவிப் பேராசிரியர் மாணவி ஒருவருக்குக் காதலைத் தெரிவித்தார். இதனால் கொந்தளித்த மாணவர்கள் அந்த பேராசிரியரைத் தாக்கியுள்ளனர். செருப்பாலும் அடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வராவிற்கு சொந்தமான கல்லூரியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
என்ன நடந்தது!
மாணவியிடம் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்ட பேராசிரியர் அப்துல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த வீடியோவில் மாணவியைப் பார்த்து அந்த பேராசிரியர், "உங்கள் பேட்ச் மாணவர்கள் காட்டிய அளவற்ற அன்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.. இந்த நேரத்தில் உங்கள் பேட்ச்சில் உள்ள பெண்களில் ஒருவருக்கு நான் என் காதலைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இந்த நிகழ்வில் நான் அனைவருக்கும் சாக்லேட் கொடுக்கவும் விரும்புகிறேன்" எனச் சொல்லியிருக்கிறார். பிறகு அவர் அந்த குறிப்பிட்ட மாணவியிடம் "ஐ லவ் யூ" என்று சொல்லியுள்ளார்.
ஏற்க முடியல
இதனால் அந்த மாணவி அதிர்ந்து போனார். வகுப்பறையில் அனைவருக்கும் முன்னிலையில் பேராசிரியர் இதுபோல நடந்து கொண்டதை அந்த மாணவியால் ஏற்கவே முடியவில்லை. பேராசிரியர் தனது பேச்சை முடித்தவுடன், அவரை தடுத்து நிறுத்திய மாணவி இது தொடர்பாகக் கல்லூரி முதல்வரிடம் பேசப் போவதாகச் சொன்னார். அதற்குத் துளியும் சலனமே இல்லாமல் அந்த மாணவி தன்னை காதலித்ததாகவும் அதற்கு ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.
மிரட்டல்
அதாவது அந்த மாணவி கேள்விக்கு, "நீ தானே ஐ லவ் யூ என முதலில் சொன்னாய்" எனச் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த அந்த மாணவி, "நான் எப்போது உங்களிடம் ப்ரோபோஸ் செய்தேன்" எனக் கேட்கிறார். அதற்கு அந்த பேராசிரியர், "சிசிடிவி ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதில் எல்லாம் தெளிவாக இருக்கிறது" என்றார். அந்த சிசிடிவி ஆதாரத்தை இப்போது காட்டுங்கள் என அந்த மாணவி கேட்கவே.. "நான் நாளை உன்னிடம் பேசுகிறேன்" எனச் சொல்லிச் சமாளித்தவாறே அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
அத்தோடு நிற்காமல் தனது காதலை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை அனைவரும் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு, அந்த பேராசிரியர் க்ளாஸ் ரூமை விட்டுக் கிளம்புகிறார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மற்ற மாணவர்கள் கோபமடைந்து அந்த பேராசிரியரை முற்றுகையிட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது..
pic.twitter.com/9GV3Low3Bx
— Mogambo (@mogambboo) March 26, 2026
🚨 BIZARRE Bengaluru Medical College Drama!
Prof proposes marriage to student MID-CLASS... claims SHE proposed first & offers chocolates to the whole batch 🍫😳
Students lose it, drag him outside & confront him hard 🔥
Faculty-student boundaries?…
செருப்படி
இது தொடர்பாகப் பரவும் மற்றொரு வீடியோவில் அந்த மாணவி பேராசிரியரைச் செருப்பால் அடிப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. மற்ற மாணவர்களும் அந்த பேராசிரியரைக் கடுமையாகத் தாக்குகிறார்கள். கல்லூரி வளாகம் முழுக்க அவரை மாணவர்கள் துரத்தித் துரத்தி தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பேராசிரியர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தது. அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாகப் போலீசிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications