ஒரு பெரிய மனிதர் பண்ணும் வேலையா இது.. வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வீடியோவில் வசமாக சிக்கிய சித்தராமையா!-வீடியோ

    பெங்களூர்: பெண் தொண்டர் சுடிதார் துப்பட்டாவை பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்று தனது உதவியாளரை பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    காங்கிரஸின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா முன் கோபத்திற்கு பெயர் பெற்றவர். இதனால் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

    அதுவும் லேசுப்பட்ட பிரச்சினைகள், இல்லை. பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், சித்தராமையா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

    துப்பட்டா

    துப்பட்டா

    இப்படித்தான் கடந்த ஜனவரி மாதம் குறைகேட்பு நிகழ்ச்சி ஒன்றில், சித்தராமையா பங்கேற்றபோது, அவரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய பெண் தொண்டர் ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, அவர் வைத்திருந்த மைக்கை தட்டிவிட்டார் சித்தராமையா. இந்த காட்சிகள், வீடியோவில் பதிவாகி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நவீனகால துச்சாதனன் என்று சித்தராமையாவுக்கு பட்டப்பெயர் வைத்து விமர்சனம் செய்தது பாஜக.

    பளார்

    பளார்

    இந்த நிலையில் மைசூரில் தனது உதவியாளர் கன்னத்தில் இன்று ஓங்கி அடித்துள்ளார் சித்தராமையா. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிறகு அங்கே இருந்து அவர் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் பார்வையிடுவதற்காக திரும்பினார். சற்று தூரம் நடந்து சென்றபோது திடீரென அவரது உதவியாளர் கன்னத்தில் பளாரென்று அறை விட்டார்.

    அதிர்ச்சி காட்சி

    அதிர்ச்சி காட்சி

    இது செய்தியாளர்களின், வீடியோ கேமராக்களில் லைவாக பதிவானது. இதனால் நிருபர்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த உதவியாளரை தொடர்பு கொண்டு நிருபர்கள் விவரம் கேட்டனர்.

    செல்போன்

    அந்த உதவியாளர் கூறுகையில், அதிகாரி ஒருவர் சித்தராமையாவிடம், பேசவேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார். தொலைபேசியை அவரது காது அருகே நான் கொண்டு சென்றேன். அவர் அவசரமாக நடந்து சென்று கொண்டிருந்ததால், நான் இவ்வாறு செய்ததை விரும்பவில்லை. எனவே அடித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+