பாஜக கோட்டையை புல்டோசரை ஏற்றி காலி செய்யும் டிகே சிவக்குமார்.. கடலோர கர்நாடகாவில் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் கூட கடலோர கர்நாடகாவில் பாஜகவின் ஆதிக்கம் தான் தொடர்கிறது. அந்த கோட்டையை காலி செய்யும் முயற்சியில் தான் இப்போது முதல்வர் சித்தராமையா இறங்கியுள்ளார். 2028 கர்நாடக தேர்தலில் கடலோர காங்கிரஸில் கணிசமான தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்பதே அவரது இலக்காக இருக்கிறது.

கர்நாடகாவின் அமைச்சரவை கூட்டத்தை முதல்முறையாக கடலோர கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முதல்வர் டி.கே. சிவக்குமார் அரசு முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 18ம் தேதி மங்களூருவில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நிர்வாக ரீதியான முடிவாக இது பார்க்கப்பட்டாலும், 2028 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சிவக்குமார் வகுக்கும் அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.

Karnataka Congress Coastal Karnataka

கர்நாடக அமைச்சரவை

கர்நாடக அமைச்சரவை கூட்டங்கள் பொதுவாக தலைநகர் பெங்களூரிலேயே நடைபெறும். இந்தச் சூழலில் தான் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார். கர்நாடகாவில் இதுபோல மங்களூரில் அமைச்சரவை கூட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் தென்னிந்தியாவின் "இந்துத்துவ லேப்" என நீண்ட காலமாக குறிப்பிடப்படுகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் அடிமட்ட அளவில் வலுவாக செயல்பட்டு வந்துள்ளன. 1975ல் இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்ததும், அதற்கு எதிரான மக்களின் அதிருப்தியை ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கடலோர கர்நாடகாவில் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றது.

கடலோர கர்நாடகா

1997 ஆகஸ்டில் ஒருங்கிணைந்த தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்து உடுப்பி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தற்போது தட்சிண கன்னடாவில் 8 சட்டசபை தொகுதிகளும், உடுப்பியில் 5 தொகுதிகளும் என மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. 2023 தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் கூட இந்த 13ல் பாஜக ஆதிக்கம் தான். அந்த தேர்தலில் உடுப்பியில் உள்ள 5 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. தட்சிண கன்னடாவின் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதாவது மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 11 தொகுதிகள் பாஜக வசமானது.

2013 தேர்தலைத் தவிர, கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இந்த இரண்டு கடலோர மாவட்டங்களிலும் பாஜகவே அதிக அளவிலான தொகுதிகளை வென்று வருகிறது. 2013ல் மட்டும் காங்கிரஸ் 13 தொகுதிகளில் 10 இடங்களை கைப்பற்றியது.

அஹிந்தா வாக்குகள்

2023 தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் சித்தராமையா தலைமையிலான அஹிந்தா(AHINDA) சமூகங்களின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு இப்போது அரசியல் சூழல் மாறியுள்ளது. சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டார். இதனால் அஹிந்தா வாக்குகள் என்னவாகும் என்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது. AHINDA என்பது சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளை குறிக்கும் சொல்லாகும்.

எனவே, 2028 தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. சித்தராமையா கர்நாடகா காங்கிரஸின் முகமாக இல்லாத நிலையில், அஹிந்தா வாக்குகள் பிரியலாம். இதனால் அதிருப்தியை சமாளித்து, வெற்றிக்கான வாக்குகளை பெற புதிய வாக்கு வங்கியை காங்கிரஸ் தேட வேண்டிய நிலை உள்ளது. அதில் தான் கடலோர கர்நாடகா முக்கியமானதாக மாறியுள்ளது.

என்ன சொல்கிறார்

இது குறித்து பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் நாட்டு கூறுகையில், "தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில் சுமார் 30 ஆண்டுகளாக பாஜக வலுவாக இருப்பதால், மங்களூரில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு காங்கிரஸை வளர்க்க அந்த பகுதி வாக்காளர்களை கவர சிவக்குமார் எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாக இருக்கலாம்.

மத்திய மற்றும் வடக்கு கர்நாடகாவில் பாஜகவின் பாரம்பரிய வாக்காளர்களான லிங்காயத்துகளிடம் காங்கிரஸ் ஆதரவை அதிகரிக்க முயல்வதுடன், கடலோர கர்நாடகாவில் பாஜகவின் இந்துத்துவ வாக்கு தளத்தையும் உடைக்க டி.கே. சிவக்குமார் முயல்கிறார். காங்கிரஸின் நோக்கம் கடலோர கர்நாடகாவை முழுமையாக தனது கோட்டையாக மாற்றுவது அல்ல. மாறாக பாஜக எளிதாக வெற்றி பெறும் சில தொகுதிகளில் கடும் போட்டி தருவது தான். அங்கு சில இடங்களில் பாஜகவின் வெற்றியை பறிப்பது கூட காங்கிரஸுக்கு லாபம் தான்" என்றார்.

ஏன் முக்கியம்

தேர்தலில் வெல்ல கருத்தியல் மோதல் மட்டும் போதாது என்பதை புரிந்து கொண்டுள்ள டி.கே. சிவக்குமார் கடலோர கர்நாடகாவில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கடலோர கர்நாடகா தொடர்பான பல்வேறு திட்டங்கள் அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான முன்மொழிவுகள் இப்போது ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.

சுற்றுலாவும் இதில் முக்கிய அம்சமாக உள்ளது. கடலோர பகுதிக்கென தனி சுற்றுலா கொள்கையை உருவாக்கும் திட்டத்தை டி.கே. சிவக்குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார். வேலைவாய்ப்பு, சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை முன்வைத்து பாஜகவின் கோட்டையில் காங்கிரஸ் நுழைய முயல்வதையே இது காட்டுகிறது.

கடலோர கர்நாடகாவில் பாஜகவின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒன்று. அதை ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் காலி செய்துவிட முடியாது.. ஆனால் 2028 தேர்தலில் பாஜகவின் கோட்டையில் முடிந்த வரை ஊடுருவ வேண்டும் என்பதை மனதில் வைத்தே சிவக்குமார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+