மரத்தில் இருக்கும் “மங்கி”.. வெளியே போ “சங்கி”.. டிரெண்டாகும் கர்நாடக காங்கிரசார் கொண்டாட்ட வீடியோ
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் வார் ரூமில் "வெளிய போடா சங்கி" என்று முழக்கமிட்டு ஆடி பாடி கொண்டாடும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமாக 136 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெறும் 64 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் உருவாக்கப்பட்ட வார் ரூமில் பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன.
காங்கிரஸ் கொடியுடன் ஆடி பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் வீடியோ டிரெண்டாகி வருகிறது. அதில் "மரத்தில் இருக்கும் மங்கி.. வெளியே போ சங்கி" என்று முழக்கமிட்டு கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வெளிய போங்கடா சங்கி pic.twitter.com/wYadUerByU
— Gowtham (@Gowthamsuju) May 13, 2023
அந்த வீடியோவில் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் காணப்படுகிறார். அவரும் இந்த கொண்டாட்டத்தை வீடியோவாக சிரித்துக்கொண்டே பதிவு செய்து வருகிறார். ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்தில் கடந்த ஆண்டு கர்நாடக தேர்தலுக்கான காங்கிரஸ் வார் ரூம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு வியூகங்களை வகுத்து சமூக வலைதளங்களில் மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிரான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல காரணமாக அமைந்தார். அவரது ஓராண்டுகால உழைப்புக்கு இன்று பயன் கிடைத்து உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications