கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு- பஸ்களில் 'மாஸ்க்' கட்டாயம்!
பெங்களூர்: கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பலியான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் JN1 ஜே.என்.1 என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டன.

கர்நாடகாவில் கொரோனா மரணங்கள்: கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிவிட்டது. கர்நாடகாவின் பெங்களூர் சாம்ராஜ்பேட் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் கடந்த 15-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கர்நாடகாவில் மொத்தம் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
5,000 பேருக்கு பரிசோதனை: கர்நாடகா கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். ஒருநாளைக்கு 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். காய்ச்சல், சளி பாதிப்புடன் வருவோருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படும். இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.
தயார் நிலையில் மாநில அரசு: மேலும் கேரளாவை ஒட்டிய தட்சிண கன்னடா, குடகு, மைசூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும் பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயற்கை சுவாச கருவி, ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்றார் அமைச்சர் தினேஷ் குண்டு ராவ்.
பேருந்துகளில் முக கவசம் கட்டாயம்: ஏற்கனவே கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பேருந்துகளில் பயணிப்பவர்களும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்களாக விரும்பினால் முக கவசம் அணிந்து கொள்ளலாம் எனவும் கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு அறிவுறுத்தல் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. உடல்நலன் பாதிக்கப்படும் மாணவர்களை உடனே தனிமைப்படுத்தி முதல் உதவி சிகிச்சை அளிக்க வேண்டும்; பின்னர் பெற்றோரை வரவழைத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது மாநில அரசு.
பாதிப்பு எவ்வளவு?: கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 22 ஆக இருந்தது. இது நேற்று திடீரென 78 ஆக அதிகரித்தது.
ஹோட்டல்களில் மாஸ்க் கட்டாயம்: கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் ஹோட்டல்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பப்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்களில் ஹோட்டல்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வருவோரின் காய்ச்சல் அளவும் பரிசோதிக்கப்பட உள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications