தமிழகத்துக்கு இனி காவிரி தண்ணீர் கிடையாது? கர்நாடகா கையில் எடுக்கும் பிளான்.. என்ன நடக்கப்போகுதோ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரியில் இன்று முதல் தமிழகத்துக்கு 15 நாட்கள் தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்க கர்நாடகா மறுத்து வரும் நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடப்படும் என்று ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் காவிரி நீர் திறப்பது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

karnataka-decides-to-appeal-against-cwrc-order-to-release-cauvery-water-to-tamil-nadu

டெல்லியில் நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அப்போது இன்று (ஜூலை 29) முதல் அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அதாவது இன்று காலை 8 ணிக்கு பிலிகுண்டுலுவிற்கு 3,500 கனஅடி தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெரிவிககப்பட்டது. நேற்று முன்தினம் பிலிகுண்டுலுவில் 176 கனஅடி தண்ீணர் மட்டுமே வந்த நிலையில் அதனை அடுத்த 15 நாட்கள் அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிராக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிடப்படும். பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை வைக்கப்படும் என்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். இதுபற்றி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:

''தென்மேற்கு பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எங்களின் முதன்மை நோக்கம் என்பது மாநில மக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தான் உள்ளது. காவிரி படுகைகளில் உள்ள அணைகளில் தற்போது நீர் குறைவாக உள்ளது. கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளவு 46 டிஎம்சியாக உள்ளது. ஆனால் அங்கு 16 டிஎம்சி தான் தண்ணீர் உள்ளது. இதில் 5 டிஎம்சி தண்ணீர் என்பது Dead Storage (அணையில் இருந்து எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாது). அதனை பயன்படுத்த முடியாத.

வரும் நாட்களிலும் மழையின் அளவு குறைவாக தான் இருக்கம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்யப்படும். பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி அனுமதி கோரப்படும்'' என்று கூறினார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜூலை மாதத்துக்கான தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா மழையில்லை என்று கூறியது. இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கவில்லை. இப்படியான சூழலில் தான் காவரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளதாக ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். இது இந்த விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+