‛கோபமான டிகே சிவக்குமார்’.. காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் ஓங்கி அடித்ததால் பரபரப்பு! ஷாக் வீடியோ
பெங்களூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென்று டென்ஷனான கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் ஓங்கி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதி நடந்தது. பெங்களூரில் உள்ள 3 தொகுதிகள், மைசூர், மண்டியா, பெங்களூர் புறநகர் உள்ளிட்ட தென்கர்நாடகா பகுதியில் உள்ள 14 தொகுதிகளுக்கு அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.

இதையடுத்து மீதமுள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 7 ம்தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகள் வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ளன. அதன்படி சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, பிஜாப்பூர், , குல்பர்கா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரோ, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் என்பது இன்று மாலையுடன் முடிவடைந்தது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஹாவேரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சவனூரில் நேற்று இரவு டிகே சிவக்குமார் பிரசாரத்துக்கு சென்றார்.

அப்போது டிகே சிவக்குமாரை பார்க்க ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். டிகே சிவக்குமார் தனது காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது திடீரென்று காங்கிரஸ் தொண்டர் ஒருவர் டிகே சிவக்குமார் அருகே வந்து அவரது தோளில் கைப்போட்டபடி சிரித்து கொண்டே நடந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத டிகே சிவக்குமார் கோபத்தின் உச்சிக்கு சென்றார். உடனடியாக அவர் அந்த தொண்டரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதையடுத்து சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை அங்கிருந்து இழுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. டிகே சிவக்குமாரின் இந்த செயலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
டிகே சிவக்குமார் பிரசாரம் செய்த ஹாவேரி தொகுதியின் சிட்டிங் எம்பியாக பாஜகவின் சிவக்குமார் சென்னபசப்பா உதாசி இருந்தார். இவருக்கு இந்த முறை தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்த காங்கிரஸ் சார்பில் ஏஜி மத் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். பசவராஜ் பொம்மையை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ் ஹாவேரி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications