கர்நாடகா டிஜிபி மார்பில் பாய்ந்த 2 குண்டுகள்.. கைத் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்
பெங்களூரு: கர்நாடகா டிஜிபி ஆர்.பி. சர்மாவின் கைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரது மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடகா மாநில வீட்டு வசதி வாரிய தலைவராக பதவி வகித்து வருபவர் டிஜிபி ஆர்.பி. சர்மா. அவர் தமது வீட்டில் கைத்துப்பாக்கியை புதன்கிழமை மாலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கைத்துப்பாக்கி அடுத்தடுத்து வெடித்ததில் அவரது மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. இதனையடுத்து சர்மாவின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால்தான் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது; தற்கொலை முயற்சிக்கு என எடுத்துக் கொண்டாலும் கூட சர்மா போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் 2 குண்டுகளால் சுடுவதற்கு முயற்சிக்க மாட்டார்கள் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆர்பி சர்மா பணி ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications