வருங்கால மனைவியுடன் ஆபரேஷன் தியேட்டரில் 'ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்'.. இறுதியில் டாக்டருக்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரசு மருந்து அறுவை சிகிச்சை பிரிவில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தபடி வருங்கால மனைவியுடன் டாக்டர் ஒருவர் 'ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்' நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து அந்த டாக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்..

இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் திருமணத்திற்கு ரெடியான உடனே பல்வேறு புதிய விஷயங்களை செய்கிறார்கள். அதில் ஒன்று தான் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... அதாவது திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவியுடன் கொஞ்சி குலாவி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து நினைவுகளாக சேமித்து கொள்வது.

Karnataka doctor dismissed for free wedding photoshoot in operation theater with fiancee

திருமணத்துக்கு முன்பு பல இளைஞர்கள், தங்கள் வருங்கால வாழ்க்கை துணையுடன், இயற்கை எழில் கொஞ்சும் பகுதி, ஆறு, ஏரி, கடல் உள்ளிட்ட பகுதிகளில் வித்தியாசமான முறையில் 'போட்டோஷூட்’ நடத்தி வருகிறார்கள்.ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாகிவிட்டது.. திருமணம் என்றாலே ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் கட்டாயம் என்பது மரபு போல் பின்பற்றப்படுகிறது.

அதேநேரம் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் அவர்கள் அலுவலகத்திலேயே ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி பார்த்திருப்போம் ஏன் தெலங்கானா மாநிலத்தில் போலீஸ் அதிகாரிளே தங்கள் ஆபிஸில் இப்படி ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தியதை கேள்விப்பட்டோம்.. யார் யார் எங்கு வேலை செய்கிறார்களோ அது தொடர்பாக ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி ஆச்சர்யப்பட வைத்தார்கள். இந்நிலையில், கர்நாடகத்தில் அரசு ஒப்பந்த டாக்டர் ஒருவர், அறுவை சிகிச்சை பிரிவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தபடி தனது வருங்கால மனைவியுடன் நடத்திய 'போட்டோஷூட் ’ பெரிய விவகாரமாகி உள்ளது.

அதன்படி பரமசாகர் அரசு மருத்துவமனையில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அதுவும் எப்படி என்றால் அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு உள்ளார்.

இந்த போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அடுத்த நொடி வேகமாக பரவ தொடங்கியது. அதனை பார்த்து அனைத்து பேரும் டாக்டர் அபிஷேக்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். டாக்டர் ஒருவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளித்தபடி போட்டோஷூட் நடத்தி மருத்துவ பணிக்கு இழிவு ஏற்படுத்திவிட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய ஒப்பந்த டாக்டர் அபிஷேக்கை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி பரமசாகர் அரசு மருத்துவமனை டாக்டருக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+