இது குபேரர்களின் கோட்டை! கர்நாடகா தேர்தலில் 1087 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்! முதலிடத்தில் இவரா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தம் 2615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 1087 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தான் அதிக சொத்துகள் வைத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் பெங்களூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்‛டாப்' இடங்களில் உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் பாஜக சார்பில் 224 வேட்பாளர்கள், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்கள், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி சார்பில் 209 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிக சொத்து வைத்திருக்கும் நபராக சுயேச்சை வேட்பாளர் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பாஜக வேட்பாளர் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரமான டிகே சிவக்குமார் 3வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டாப் 10 இடங்களுக்குள் பெங்களூர் நகரில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தான் அதிகம் உள்ளதும் உறுதியாகி உள்ளது.
அதாவது வேட்பாளர்களின் சொத்து விபரங்களை அவர்களின் மனுத்தாக்கலை ஆய்வு செய்து ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அதிக சொத்துகள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் யூசுப் செரிப் உள்ளார். இவர் பெங்களூர் சிக்பேட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு மொத்தம் ரூ.1633 கோடி உள்ளது. இவர் தான் கர்நாடகாவின் கோடீஸ்வர வேட்பாளராக இருக்கிறார்.
இதல் 2வது இடத்தில் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதி பாஜக வேட்பாளராக என்டிபி நாகராஜூ உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,609 கோடியாக உள்ளது. இவர் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு பாஜகவுக்கு தாவிய நிலையில் எம்எல்சியாக உள்ளதோடு தற்போது மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ராமநகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதி வேட்பாளருமான டிகே சிவக்குமார் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடியாக இருக்கிறது. கடந்த 2018 சட்டசபை தேர்தலுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு ரூ.595 கோடி வரை உயர்ந்துள்ளது. அதாவது டிகே சிவக்குமாரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,214.93 கோடியாக இருக்கிறது. மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை கணக்கிட்டால் அவரது மொத்த மதிப்பு ரூ.1,415 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 4வது இடத்தில் பெங்களூர் கோவிந்தராஜநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியகிருஷ்ணா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,156 கோடி ரூபாயாக இருக்கிறது. 5வது இடத்தில் பெங்களூர் ஹெப்பால் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பைரதி சுரேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.648 கோடிாக இருக்கிறது. 6வது இடத்தில் பெங்களூர் சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்ஏ ஹாரீஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.439 கோடியாகும்.
அதன்பிறகு 7வது இடத்தில் ஹாசன் மாவட்டம் பேலூர் சட்டசபை தொகுதி பாஜக வேட்பாளர் எச்கே சுரேஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.435 கோடியாக இருக்கிறது. 7 வது இடத்தில் பெங்களூர் பொம்மனஹள்ளி ஜேடிஎஸ் வேட்பாளர் நாராயண் ராஜூ உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.416 கோடியாக இருக்கிறது.
8வது இடத்தில் பல்லாரி தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் அனில் லாட் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜேடிஎஸ் கட்சிக்கு தாவிய நிலையில் இவரது சொத்து மதிப்பு ரூ.380 கோடியாக இருக்கிறது. 9 வது இடத்தில் உத்தர கன்னடா (கார்வார்) மாவட்டம் ஹலியால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான தேஷ்பாண்டே உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.363 கோடியாக இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால் கர்நாடகாவில் போட்டியிடும் 2,586 வேட்பாளர்களில் 1,087 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 42 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 35 சதவீத வேட்பாளர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் தற்பாது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர தங்களின் பெயரில் சொத்துகள் இல்லை எனக்கூறி 14 பேர் களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications