‛140’ தொகுதிகளை வெல்லும் காங்கிரஸ்! இந்தியா டுடே கருத்து கணிப்பில் உறுதி! காரணம் ஜேடிஎஸ் தானாமே?ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் இந்தியா டுடே கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியையும் தாண்டி மிகப்பெரிய அளவில் சிறப்பான வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள மிகப்பெரிய ரகசியம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. மாலை 5 மணிநேர நிலவரப்படி மொத்தம் 65.69 சதவீத ஓட்டு பதிவானது.
இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தியா டுடே கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டிக்கும் தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வெற்றி: இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெல்லும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. கர்நாடாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி 113 இடங்களை தாண்டி குறைந்தது 122 முதல் அதிகபட்சமாக 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர்.
பாஜகவுக்கு பெரியஅடி: மாறாக இந்த கருத்து கணிப்பில் பாஜக 67 முதல் 80 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் என்வும் ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 25 தொகுதிகளில் வெல்லலும் எனவும் மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 3 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதிகபட்சமாக 80 தொகுதிகளில் மட்டுமே வெல்லாம் என இந்தியா டுடே கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு அதிர்ச்சி வைத்தியாக உள்ளது.
ஜேடிஎஸ்க்கு ஷாக்: அதேபோல் கடந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அதிகபட்சாம 25 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு கூறப்பட்டுள்ளது. இது அந்த கட்சிக்கு நிச்சயமாக ஷாக்காக இருக்கும். தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக மாறி முதல்வர் இருக்கையை அலங்கரிக்க நினைத்த மாஜி முதல் அமைச்சருக்கு இது நிச்சயம் ஏமாற்றமாக அமையும்.
காங்கிரஸ் கைகொடுப்பது என்ன: இந்நிலையில் தான் கடந்த முறை 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிகபட்சமாக 140 தொகுதிகளை பெறும் என இந்தியா டுடே கூறியிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் தான் தற்போது முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகாவை பொறுத்தமட்டில் 6 மண்டலங்களாக பிரிக்கலாம். பழைய மைசூர், ஹைதராபாத் -கர்நாடகா, கடலோர கர்நாடகா, பெங்களூர், மும்பை -கர்நாடகா, மற்றும் மத்திய கர்நாடகா என 6 பிரிவுகளாக பிரிக்கலாம்.
பழைய மைசூர்:இதில் பழைய மைசூர் மாவட்டங்கள் மட்டுமே ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். இங்கு மட்டும் தான் ஜேடிஎஸ் கட்சி எப்போதும் அதிக இடங்களில் வெல்லும். ஆனால் இந்த கருத்து கணிப்பில் பழைய மைசூர் மாவட்டங்களிலும் கூட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மக்கள் உள்ளது புலனாகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் ஆதிக்கம்: அதாவது பழைய மைசூர் மாவட்டங்களில் மொத்தம் 62 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 36 இடங்களை கைப்பற்றும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 18 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் மற்றவர்கள் 3 இடங்களிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பழைய மைசூர் பகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டுகள் காங்கிரஸ் வசம் சென்றுள்ளது. அதோடு ஜேடிஎஸ் கோட்டையிலும் காங்கிரஸ் அந்த கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் இயல்பாக பழைய மைசூர் பகுதியில் ஜேடிஎஸ் கட்சி தனது செல்வாக்கை இழக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு விழுந்து இருக்க வாய்ப்புள்ளது.

டிகே சிவக்குமார் எபெக்ட்: இதனால் தான் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய தேர்தலில் 122 முதல் 140 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதாலும் ஜேடிஎஸ்ஸை காட்டிலும் பழைய மைசூர் பகுதியில் உள்ள ஒக்கலிகர் மக்கள் காங்கிரஸ் கட்சிக்குஓட்டளித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
முஸ்லிம் ஓட்டுகள்: மேலும் கடலோர கர்நாடகா மாவட்டங்களை தவிர்த்து மத்திய-கர்நாடகா, ஹைதரபாத்-கர்நாடகா, பெங்களூர், மும்பை-கர்நாடகா மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சி அதிகபட்சமாக 2 முதல் 3 தொகுதிகளை பெறும். இந்த இடங்களில் பல தொகுதிகளில் முஸ்லிம் ஓட்டுகளை வழக்கமாக ஜேடிஎஸ் கட்சி பிரிக்கும். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மிகவும் குறைந்த ஓட்டுகளில் பாஜகவிடம் தோல்வியடைவார்கள். ஆனால் தற்போதைய கருத்து கணிப்பில் கடலோர கர்நாடகாவை தவிர பிற மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சி தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு மாறி இருப்பது தெரிகிறது.
பிற பகுதிகள்: அதன்படி 23 தொகுதிகள் கொண்ட மத்திய கர்நாடகாவில்காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத்-கர்நாடகா மாவட்டங்களில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும், ஜேடிஎஸ் 1 இடங்களிலும் வெல்லும் எனவும், மும்பை கர்நாடகா மாவட்டஙகளில் மொத்தம் 50 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பெங்களூரில் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், ஜேடிஎஸ்க்கு பூஜ்ஜியம் இடங்கள் தான் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications