காங்கிரஸை கைவிட்டால்.. பாஜகவில் நடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவியா? நோ சான்ஸ்-அமைச்சர் அசோக் பதிலடி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மாஜி எம்பியும், நடிகையுமான நடிகை ரம்யா, தனக்கு பாஜகவில் சேர அழைப்பு வந்தது. பாஜகவில் சேர்ந்தால் உடனே அமைச்சர் பதவி தருவதாக ஆபர் கொடுத்தனர் என கூறியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில் அதுபற்றி பாஜக அமைச்சர் அமைச்சர் ஆர் அசோக் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை போல் கர்நாடகாவிலும் நடிகர், நடிகைகள் அரசியலில் கால்பதித்து வருகின்றனர். குறிப்பாக தற்போதும் கூட நடிகை, நடிகர்கள் அரசியல் களத்தில் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்பியாக நடிகை சுமலதா உள்ளார். இவர் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியாவார். இவர் தற்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்.

அதேபோல் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கிச்சா சுதீப், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக உள்ளார். தனது கஷ்டகாலத்தில் பசவராஜ் பொம்மை பக்கபலமாக இருந்ததாக தெரிவித்த சுதீப் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். அதேபோல் நடிகர் ஜக்கேஷ் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.
நடிகை ரம்யா: இதேபோல் நடிகையான நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மண்டியா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்பியான இவர் காங்கிரஸ் கட்சியின் ஐடி விங் தலைவராகவும் செயல்பட்டார். அதன்பிறகு அரசியலில் இருந்து நடிகை ரம்யா ஒதுங்கி இருந்து வந்தார். தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பாஜக ஆபர்: இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பங்கேற்றார். அப்போது, அவர் ‛‛என்னை பாஜகவில் இணைய அக்கட்சியின் முக்கிய தலைவர் கோரிக்கை வைத்தார். பாஜகவுக்கு வந்தால் அமைச்சராக்குவதாக எனக்கு ஆபர் வந்தது. காங்கிரஸ் கட்சியின் சில விஷயங்களை நான் எதிர்த்தால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நான் காங்கிரஸ் கட்சியை விட்டு எங்கும் போகவில்லை'' என்றார்.

அமைச்சர் விளக்கம்: நடிகை ரம்யாவின் இந்த பேச்சு தான் தற்போது கர்நாடகா அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் பிரமுகர்களை பாஜக ஆசை வார்த்தைகள் காட்டி இழுக்க முயற்சிப்பதாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் நடிகை ரம்யாவுக்கு பாஜக பெரிய ஆபர் கொடுத்து இழுக்க முயன்றதா? என்பது பற்றி கர்நாடகா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் அசோக் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் ஆர் அசோக் கூறியதாவது:
சினிமாவிலேயே இருக்கட்டும்: ‛‛தேர்தல் நேரம் என்பதால் அரசியல் சார்ந்த விஷயங்களை நடிகை ரம்யா பேசியுள்ளார். தேர்தல் சமயத்தில் அனைவரும் ஹீரோ ஆக வேண்டும் என முயற்சிக்கிறார்கள். நடிகை ரம்யாவை பாஜகவுக்கு அழைக்கும் அளவுக்கு கட்சி நிலை மாறவில்லை. நடிகை ரம்யாவுக்கு பாஜகவுக்கு அழைக்கவில்லை. நடிகை ரம்யா எப்போதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான். அவருக்கு எந்த ஆபரும் கொடுக்கவில்லை. எந்த தொகுதியும் ஒதுக்குவதாக கூறவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் கொடுப்பது இல்லை. அவர் சினிமாவில் இருக்கிறார். அவர் அங்கேயே இருக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications