‛ஆபரேஷன்’.. கர்நாடகாவில் பாஜக ஆட்சி தான்! அமைச்சர் அசோக் சொன்ன ஒற்றை வார்த்தை! அலறும் காங்கிரஸ்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறலாம் என பல கருத்து கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி தான் அமையும் என ‛தாமரை' கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜக அமைச்சர் ஆர் அசோக் சொன்ன ஒற்றை வார்த்தையால் காங்கிரஸ் கட்சி அலற தொடங்கி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. நாளை காலை கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை துவங்கி விறுவிறுப்பாக நடைபெறும்.
இதனால் நாளை மதியத்துக்கு மேல் கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தெரியவந்துவிடும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானாவை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளன. காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக பல கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அதேவேளையில் பாஜக கருத்து கணிப்புகளை புறம்தள்ளியுள்ளது. கருத்து கணிப்புகளை தாண்டி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இதன்மூலம் கர்நாடகாவில் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஒருவேளை கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக கட்சி ஜேடிஎஸ்சுடன் கூட்டணி அமைக்கலாம். இல்லாவிட்டால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இதனால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் நாளை வெற்றி பெறும் வேட்பாளர்களை பாஜகவிடம் இருந்து பாதுகாக்க திட்டம் வகுத்துள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில வருவாய்த்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஆர் அசோக் கூறிய ஒற்றை வார்த்தை காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது. மேலும் ‛ஆபரேஷன் தாமரை' மூலம் நாளை வெற்றி பெறும் வேட்பாளர்களை பாஜக பறித்து கொள்ளுமோ என்ற பயத்தை காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு அதிகரித்துள்ளது. அப்படி அமைச்சர் ஆர் அசோக் கூறியது என்ன?.
அதாவது கன்னட செய்தி சேனலான நியூஸ் பர்ஸ்ட்டிடம் அசோக் கூறியதாவது: ‛‛கர்நாடகாவில் பாஜக தனி மெஜாரிட்டி பெறும். இந்த தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும். தேர்தல் கருத்து கணிப்பு அப்படியே பலிக்கும் என கூறிவிட முடியாது. இதனால் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். மக்களுக்கு எது சரி, எது தப்பு என்பது நன்றாக தெரிகிறது. மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தாலும் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம். ஒருவேளை காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம்.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி நம்பர் இருக்காது. இந்த வேளையில் தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நாங்கள் உரிமை கோரி ஆட்சியை பிடிப்போம். இதற்கு கட்சி மேலிடத்தின் உதவி அனைத்து வகைகளிலும் தேவைப்படும்'' என்றார். இந்த வேளையில் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜகவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆர் அசோக், ‛‛நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். எப்படி, எப்போது என கேட்காதீர்கள். மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பிளான் பி என்ன என்பது பற்றி கட்சி மேலிட தலைவர்கள், மாநில தலைவர்களுடன் ஆலோசிப்போம். அதன்பிறகு எங்களின் செயல்பாட்டை தொடங்குவோம். இந்த முறையும் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். இந்த முறையும் கர்நாடகாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி தொடரும்'' என்றார்.

ஆர் அசோக், கர்நாடகாவில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். பெங்களூர் பத்நாபநகர் தொகுதியில் 3 முறை வென்ற இவர் 4வது முறையாக போட்டியிட்டுள்ளார். மேலும் ராமநகர் மாவட்டம் கனகபுராவிலும் பாஜக சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகேசிவக்குமாரை எதிர்த்து ஆர் அசோக் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் அவர் இவ்வளவு உறுதியாக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்து இருப்பது ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் , ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களை பாஜக இழுத்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால் இருகட்சியினரும் நாளை வெற்றி பெறும் வேட்பாளர்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளை தொடங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். கடந்த 2018ல் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடி(எஸ்) 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த கூட்டணியில் இருந்து 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவிய நிலையில் பாஜக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் நாளை சட்டசபை தேர்தல் முடிவுபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications