Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ட்விஸ்ட்.. ‛கை’ படையில் மனைவி கீதா! நடிகர் சிவராஜ் குமாரும் காங்கிரசுக்கு பிரசாரம்! பாஜகவுக்கு அடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் கிச்சா சுதீப் பிரசாரம் தொடங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகருமான சிவராஜ்குமார் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் இன்று காங்கிரஸில் இணைந்த நிலையில் இந்த அறிவிப்பை சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக முயன்று வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

 Karnataka Election: Actor Shiva Rajkumar to campaign for Congress after his wife Geetha joins grand old party

குறிப்பாக சினிமா நடிகர், நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்த கட்சிகள் முயன்று வருகின்றன. அதன்படி நடிகர் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் முன்னிலையில் கீதா சிவராஜ் குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். இவரது தந்தை பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் கர்நாடகா முதல்வராக இருந்தவர். மேலும் கீதாவின் சகோதரர் மது பங்காரப்பா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் சொரபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி கீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அதுபற்றி நடிகர் சிவராஜ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி சிவராஜ் குமார் கூறுகையில், ‛‛மனைவி கீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி. புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நான் அவருக்கு முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்.

நானும், எனது மனைவியும் காங்கிரஸ் வேட்பாளர் மதுபங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம். எனது மனைவியின் தந்தை அரசியலில் இருந்தார். இதனால் எனது மனைவிக்கு அரசியல் பற்றி கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சமூக பணி மற்றும் குழந்தைகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எல்லாம் தெரியும்'' என்றார்.

நடிகர் சிவராஜ் குமார் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறிய மது பங்காரப்பா, கீதா சிவராஜ்குமாரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவர் சிவமொக்கா மாவட்டம் சொரபா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மது பங்காரப்பாவை எதிர்த்து அவரது சகோதரரும் சிட்டிங் எம்எல்ஏவுமான குமார் பங்காரப்பா பாஜகவில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியை பொறுத்தமட்டில் எப்போதும் மது பங்காரப்பா, குமார் பங்காரப்பா இடையே தான் போட்டி நிலவி வருகிறது. கடந்த முறை காங்கிரஸில் மதுபங்காரப்பா, பாஜகவில் குமார் பங்காரப்பா போட்டியிட்டனர். இதில் குமார் பங்காரப்பா வெற்றி பெற்றார். சகோதரர்கள் மது பங்காரப்பா, குமார் பங்காரப்பா ஆகியோரை பொறுத்தமட்டில் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் எப்போதும் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக தான் இருந்து வருகிறார்.

மது பங்காரப்பா இதற்கு முன்பு ஜேடிஎஸ் கட்சியில் இருந்தார். அப்போது கீதா சிவராஜ் குமாரும் ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு மது பங்காரப்பா காங்கிரஸில் இணைந்த நிலையில் கீதா சிவராஜ் குமாரும் இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. அதாவது சிவராஜ் குமார் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன் என்பதோடு, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன். இவர்களுக்கு மாநிலம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருப்பபோது சிவராஜ்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் இது பாஜகவுக்கு பின்னடைவாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+