Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் யார் தெரியுமா?.. முழுலிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக பாஜக 189 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூர் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் 2 கட்டங்களாக 166 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் சார்பில் ஒரே கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் 2 கட்டமாக 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Karnataka Election: Bangalore assembly Constituencies who were gets ticket from BJP, full candidates list here

ஆனால் பாஜகவில் கடும் இழுபறி நிலவி வந்தது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்பட்டது தான் இதற்கு காரணம். பல தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கேட்டனர். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் ஒருவழியாக டெல்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

27 தொகுதிக்கு அறிவிப்பு: அதன்படி 189 தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 26 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரை பொறுத்தமட்டில் அனைத்து மாநில மக்களும் வசித்து வருகின்றனர்.

தமிழர்கள் அதிகம்: குறிப்பாக தமிழர்கள் அதிகமாக உள்ளனர். அதன்படி சிவாஜிநகர், காந்தி நகர், புலிகேசி நகர், சாம்ராஜ் பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை தமிழர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். மேலும், ஜெயநகர், ராஜராஜேஸ்வரி நகர், தாசரஹள்ளி, சர்வக்ஞ நகர், ராஜாஜிநகர், மகாலட்சுமி லேஅவுட் உள்பட பல தொகுதகிளில் கணிசமான அளவில் தமிழர்கள் உள்ளனர்.

Karnataka Election: Bangalore assembly Constituencies who were gets ticket from BJP, full candidates list here

2 தொகுதியில் போட்டி: அதன்படி பெங்களூர் பத்மநாபநகர் சட்டசபை தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை எதிர்த்து ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் களமிறங்கி உள்ளார். இதனால் இந்த முறை ஆர் அசோக் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அமைச்சர்கள்: மல்லேஸ்வரம் தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணன், கேஆர்புரா தொகுதியில் நகர திட்டமிடல் துறை அமைச்சர் பசவராஜ், யஷ்வந்த்புராவில் தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்டி சோமசேகர், ராஜராஜேஸ்வரி நகரில் அமைச்சர் தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா, மகாலட்சுமி லேஅவுட்டில் கலால்துறை அமைச்சர் கோபாலய்யா உள்ளிட்டவர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர்கள் பசவராஜ், எஸ்டி சோமசேகர், முனிரத்னா, கோபாலய்யா உள்ளிட்டவர்கள் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்தனர். அதாவது பசவராஜ், எஸ்டி சோமசேகர், முனிரத்னா உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், கோபாலய்யா ஜேடிஎஸ் கட்சியில் இருந்தும் கடந்த 2019 ல் பாஜகவுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டிங் எம்எல்ஏக்கள்: பெங்களூர் ராஜாஜிநகரில் மாஜி அமைச்சரும் சிட்டிங் எம்எல்ஏவுமான சுரேஷ் குமார், எலகங்கா தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ எஸ்ஆர் விஸ்வநாத், பசவனகுடி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ ரவி சுப்ரமணியா, சிக்பேட்டையில் தற்போதைய எம்எல்ஏ உதய கருடாச்சர், பெங்களூர் தெற்கு தொகுதியில் கிருஷ்ணப்பா, ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ்க்கு வாய்ப்பு: பேடராயனபுராவில் தம்மேஷ் கவுடா, தாசரஹள்ளியில் முன்னாள் எம்எல்ஏ முனிராஜூ, புலிகேசி நகர் தனித்தொகுதியில் முரளி, சர்வக்ஞநகர் தொகுதியில் பத்மநாபரெட்டி, சிவிராமன் நகர் தனி தொகுதியில் ரகு, சிவாஜிநகர் தொகுதியில் சந்திரா, சாந்தி நகர் தொகுதியில் சிவகுமார், காந்தி நகர் தொகுதியில் சப்தகிரி கவுடா, விஜயநகரில் ரவீந்திரா, சாம்ராஜ்பேட்டையில் பாஸ்கர்ராவ் போட்டியிடுகிறார். பாஸ்கர்ராவ் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் விருப்ப ஓய்வு பெற்ற பெங்களூர் மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிடிஎம் லேஅவுட்டில் ஸ்ரீதர் ரெட்டி, ஜெயநகரில் சிகே ராமமூர்த்தி, ஆனேக்கல் தனி தொகுதியில் ஹூல்லஹள்ளி சீனிவாஸ், தேவனஹள்ளி தனித்தொகுதியில் முனிசாமப்பா உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2 தொகுதி பெண்டிங்: பெங்களூரை பொறுத்தமட்டில் மகாதேவபுரா சட்டசபை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் தற்போது பாஜக எம்எல்ஏவாக அரவிந்த் லிம்பாவளி உள்ளார். இவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலையில் இந்த தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதேபோல் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் சோமண்ணா மைசூர் மாவட்டத்தில் சித்தராமையைாவை எதிர்த்து வருணாவிலும், சாம்ராஜ்நகரிலும் போட்டியிடுகிறார். இதனால் அந்த தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+