பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் சார்பில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கும் நிலையில் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள. மே மாதம் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கர்நாடகாவிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வந்தது. முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜனதாதளம்(எஸ்), அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இதற்கிடையே தான் இன்று காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 124 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.

வருணாவில் சித்தராமையா
அதன்படி முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் களமிறங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் எம்எல்ஏவுமான பிரியங்க் கார்கே கலபுரகி மாவட்டம் சிதாபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்எல்ஏவுமான பரமேஸ்வர், துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் போட்டியிடுகிறார்.

பெங்களூரில் தமிழர்கள் அதிகம்
பெங்களூரை பொறுத்தமட்டில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் மக்கள்தொகை தற்போது ஒரு கோடியை தாண்டிய நிலையில் தமிழர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். குறிப்பாக சிவாஜிநகர், காந்திநகர், சாம்ராஜ்பேட்டை, ஜெயநகர், பிடிஎம் லே-அவுட், சர்வக்ஞநகர், கோவிந்தராஜ் நகர், விஜயநகர் உள்ளிட்ட தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதிலும் சிவாஜிநகர், காந்திநகர், சாம்ராஜ்பேட்டை வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேடராயனபுரா தொகுதி
இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி பேடராயனபுரா தொகுதியில் கிருஷ்ணைபைரேகவுடா போட்டியிடுகிறார். 2008 ல் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கிருஷ்ணபைரேகவுடா தான் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. கிருஷ்ணபைரேகவுடா 2013 முதல் 2018 காலக்கட்டத்தில் அப்போதைய சித்தராமையா ஆட்சிக்காலத்தில் விவசாயத்துறை அமைச்சராகவும் இருந்தார்

சர்வக்ஞ நகர் தொகுதி
சர்வக்ஞநகர் தொகுதியில் கேஜே ஜார்ஜ் போட்டியிடுகிறார். தற்போது கேஜே ஜார்ஜ் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2008 ல் இந்த தொகுதி உதயமான நிலையில் அன்று முதல் இன்று வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இவரும் சித்தராமையா, குமாரசாமி அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராக இருந்துள்ளார். இதுவும் காங்கிரஸ் கோட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை-மகனுக்கு வாய்ப்பு
மேலும் பெங்களூர் விஜயநகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ கிருஷ்ணப்பா போட்டியிடுகிறார். கடந்த 2008 ல் இந்த தொகுதி உருவான நிலையில் 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் கிருஷ்ணப்பா தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு பலமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பெங்களூர் கோவிந்தராஜ் நகரில் பிரியகிருஷ்ணா போட்டியிடுகிறார். பிரிய கிருஷ்ணா என்பவர் கிருஷ்ணப்பாவின் மகன் ஆவார். இவர் கோவிந்த் ராஜ் நகரில் 2009, 2013 தேர்தல்களில் வெற்றி பெற்ற நிலையில் 2018 தேர்தலில் தற்போதைய பாஜக அமைச்சர் வி சோமண்ணாவிடம் தோல்வியடைந்தார். இருப்பினும் மீண்டும் பிரிய கிருஷ்ணாவுக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.

தந்தை -மகளுக்கு வாய்ப்பு
பெங்களூர் பிடிஎம் லேஅவுட் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக ராமலிங்க ரெட்டி உள்ளார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு பிடிஎம் லே-அவுட் தொகுதி கடந்த 2008 ல் உருவாக்கப்பட்டது. அன்று முதல் நடந்த 3 தேர்தல்களிலும் ராமலிங்க ரெட்டி தான் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அவர் போட்டியிடுகிறார். அதேபோல் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்எல்ஏ சவுமியா களமிறக்கப்பட்டுள்ளார். இவர் ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார். 2018 தேர்தலில் ஜெயாநகரில் வெற்றி பெற்ற சவுமியாவுக்கு தற்போது 2வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாந்திநகர் தொகுதி
சாந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் என்ஏ ஹாரீஷ் போட்டியிடுகிறார். தற்போது இவர் எம்எல்ஏவாக உள்ளார். இங்கும் காங்கிரஸ் கட்சி தான் செல்வாக்காக உள்ளது. இவர் கடந்த 2008 முதல் 2018 வரை நடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். தற்போதும் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தொகுதியிலும் தமிழர்கள் ஓட்டு என்பது அதிகமாக உள்ளது. அதாவது தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தமிழர்களின் ஓட்டுகள் தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிநகர் தொகுதி
சிவாஜிநகர் தொகுதியில் ரிஸ்வான் அர்ஷத் களமிறங்கி உள்ளார். தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்களும், முஸ்லிம் மக்களும் உள்ளனர். இதுவும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக தான் உள்ளது. மொத்தம் 13 முறை இந்த தொகுதி தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 7 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளனர். 4 முறை ஜனதாதளம் (எஸ்) கட்சியும், 2 முறை பாஜகவும் வென்றுள்ளது. குறிப்பாக 2008 முதல் 2018 வரை ரோஷன் பொய்க் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு கடந்த 2019ல் நடந்த இடைத்தேர்தலில் ரிஸ்வான் அர்ஷத் போட்டியிட்டு எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திநகர் தொகுதி
காந்திநகரில் தினேஷ் குண்டுராவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது இங்கு எம்எல்ஏவாக உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார். காந்தி நகர் தொகுதி இவரது கோட்டையாகும். இங்கும் தமிழர்கள் அதிகம் உள்ளனர். தமிழர்களின் ஆதரவு இருக்கும் வேட்பாளரால் தான் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியும். அதன்படி கடந்த 1999, 2004, 2008, 2013, 2018 ஆகிய 5 தேர்தல்களில் தினேஷ் குண்டுராவ் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

சாம்ராஜ்பேட்டை தொகுதி
சாம்ராஜ்பேட்டை தொகுதியிலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்களும், முஸ்லிம் மக்களும் தான் உள்ளனர். பெங்களூரில் உள்ள முக்கிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த தொகுதி எம்எல்ஏவாக ஜமீர் அகமது கான் உள்ளார். கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை இவர் கொண்டுள்ளார். இவர் 2004ல் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2008, 2013 தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன ஜமீர் அகமது கான் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி வாகை சூடினார். தற்போது மீண்டும் அவரே போட்டியிடுகிறார்.

தமிழருக்கு வாய்ப்பு
இதுதவிர ராஜாஜிநகரில் புட்டண்ணா, பசவனகுடியில் யூபி வெங்கடேஷ், மகாதேவபுராவில் நாகேஷ், ராஜராஜேஸ்வரி நகரில் குசுமா, மல்லேஸ்வரத்தில் அனுப் ஐயங்கார், ஹெப்பால் தொகுதியில் சுரேஷ், ஆனேக்கல் சிவண்ணா, ஒசக்கோட்டை சரத்குமார் பச்சே கவுடா உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் மல்லேஸ்வரத்தில் போட்டியிடும் அனுப் ஐயங்கார் தமிழர் ஆவார். இருப்பினும் கூட பெங்களூர் தெற்கு, பொம்மனஹள்ளி, சிவிராமன் நகர், சிக்பேட்டை, தாசரஹள்ளி, கேஆர்புரம், மகாலட்சுமி லேஅவுட், பத்மநாபநகர், புலிகேசிநகர், எலகங்கா, யஷ்வந்தபுரம், உள்ளிட்ட சட்டபை தொகுதிளுக்கு இன்னும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications