வெளியானது கர்நாடக காங்கிரஸ் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. சித்தராமையாவுக்கு கோலார் ‛நஹி’.. விபரம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 3வது கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. பாஜகவில் சீட் கிடைக்காமல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதிக்கு அதானி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாறாக 2வது தொகுதியாக கோலாரை கேட்ட சித்தராமையாவுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக மொத்தம் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தான் இன்று 3வது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பெலகாவி மாவட்டம் அதானி தொகுதியில் லட்சுமண் சவதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் துணை முதல்வராக இருந்தார். கடந்த தேர்தலில் லட்சுமண் சவதி அதானி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் குமட்டள்ளியிடம் தோற்றாலும் கூட எம்எல்சி பொறுப்பு வழங்கி துணை முதல்வரானார்.
அதன்பிறகு காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சி கவிழ்ப்பின்போது பாஜகவுக்கு மகேஷ் குமட்டள்ளி தாவி மீண்டும் அங்கு பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் அவருக்கு பாஜகவில் அதானி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகி நேற்று காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் இன்று அவர் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜிபி மாலதேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதி பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தொகுதியாகும். தற்போது எடியூரப்பா எம்எல்ஏவாக உள்ள நிலையில் தேர்தல் அரசியலில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் சார்பில் ஜிபி மாலதேஷ் களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடும் நிலையில் 2வது தொகுதியாக கோலாரை கேட்டார். இந்த தொகுதி சித்தராமையாவுக்கு வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்று ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதன்படி கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கொத்தூர் ஜி மஞ்சுநாத் நிறுத்தப்பட்டுள்ளார்.

பெங்களூரை பொறுத்தமட்டில் தாசரஹள்ளியில் தனஞ்செய காங்கதரய்யா, பொம்மனஃள்ளியில் உமாபதி சீனிவாச கவுடா, பெங்களூர் தெற்கில் ஆர்கே ரமேஷ் ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஹாசன் தொகுதியில் பனவாசி ரங்கசாமி, சிவமொக புறநகரில் சீனிவாஸ் கரியண்ணா உள்ளிட்டவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் மொத்தம் 209 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications