பிரசாரத்தில் கேள்வி கேட்ட வாலிபர்.. கோபத்தில் கன்னத்திலேயே அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ..பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்எல்ஏவுமான எம்பி பாட்டீல் குறைகளை சொன்ன இளைஞர் மீது திடீரென கோபப்பட்டு அவரை கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரை பின்தொடர்ந்து சென்று தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த மூத்த தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏவான எம்பி பாட்டீல் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.
தற்போது எம்எல்ஏவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி மீண்டும் எம்பி பட்டீலுக்கு பபலேஷ்வர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் நேற்று இரவு எம்பி பாட்டீல் தனது ஆதரவாளர்களுடன் கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடபட்டு வந்தார்.
அப்போது அவர் தேவபுரா கிராமத்துக்கு சென்றார். ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த வேளையில் ஹனுமந்தா என்ற இளைஞர் திடீரென எழுந்து எம்பி பாட்டீலுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதுபற்றி ஹனுமந்தா கூறுகையில், ‛‛தேர்தல் வந்ததால் தான் 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்துக்கு வந்து உள்ளீர்கள். எங்களின் கிராமத்துக்கு எந்த வளர்ச்சி பணிகள் செய்தீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்?'' என கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த எம்பி பாட்டீல் கூட்டத்துக்கு நடுவேயே ஹனுமந்தாவின் கன்னத்தில் ‛பளார்' என அடித்தார். அதோடு ஆத்திரம் அடங்காத எம்பி பட்டீல் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று அடித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் எம்பி பட்டீலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் எம்பி பட்டீலின் செயலுக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக கர்நாடகா பாஜவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, ‛‛காங்கிரஸின் டிஎன்ஏவில் குண்டாயிசம் உள்ளது. திமிர்பிடித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ எம்பி பாட்டீல் குறைகளை சொன்ன இளைஞரை தாக்குகிறார். இதன்மூலம் குறைகளை கூறினால் தாக்குவோம் என்ற ஒரே உத்தரவாதத்தை தான் காங்கிரஸ் கட்சி வழங்குகிறது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications