கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியா? தொங்கு சட்டசபையா? குழப்பும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய பல கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. சில டிவி சேனல்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி கர்நாடகாவில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகின.

கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் உள்ள கர்நாடக சட்டசபையில் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் மட்டுமே ஆட்சி அமைத்தார்.
அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி முதல்வராக பதவியேற்று ஆட்சி அமைத்தார். ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்தது.
இதனையடுத்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் என தெரிவிக்கப்பட்டிருந்தன
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களில் வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 78 முதல் 90 இடங்களில் வெல்லும் எனவும் ஜேடிஎஸ் கட்சிக்கு 23 முதல் 29 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ் 103-118
பாஜக 79-94
ஜேடிஎஸ் 25-33
ரிபப்ளிக் டிவி பி மார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ் 94-108
பாஜக 85-100
ஜேடிஎஸ் 24-38
சிவோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ் 100-112
பாஜக 83-95
ஜேடிஎஸ் 21-29
நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு:
காங்கிரஸ் 86
பாஜக 114
ஜேடிஎஸ் 21
என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி ஆட்சி அமைக்கப்போவது யார் என்று உண்மை நிலவரம் தெரிய வரும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications