கர்நாடகாவில் தொங்கு சட்டசபை.. ஸ்கோர் செய்யும் காங்கிரஸ்.. மகிழ்ச்சியில் ஜேடிஎஸ்-புதிய எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டிவி 9 பாரதவர்ஷ்- போல்ஸ்ட்ராட் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின் படி கர்நாடகாவில் தொங்கு சட்ட சபை அமையும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 75 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமாக வந்து வாக்கினை பதிவு செய்தனர். இன்று மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.

Karnataka Election Exit Poll Results 2023: Kumarasamy become a king maker -TV9 Bharatvarsh- Polstrat

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் இந்த மேஜிக் எண்ணை எட்டும் கனவுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. கர்நாடகாவில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது.

இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலமாக பாஜகதான் உள்ளது. இதனால் இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்று அக்கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டது. பிரதமர் மோடி உள்பட பாஜகவின் உயர் மட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மறுமுனையில் காங்கிரஸ் கட்சியும் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்பட பலரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலின் முடிவு நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகின.

டிவி 9 பாரதவர்ஷ்- போல்ஸ்ட்ராட் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் கர்நாடகாவில் தொங்கு சட்ட சபை அமையும் என்று கணிக்கபப்ட்டுள்ளது. ஆளும் பாஜக 88 முதல் 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 99-109 தொகுதிகளிலும் ஜேஎடிஸ் கட்சி 21-26 தொகுகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது . காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்றாலும் கிங்மேக்கராக குமாராசாமி இருப்பார் என்று இந்த கணிப்பு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+