‛பெரிய பூஸ்ட்’.. காங்கிரஸில் இணையும் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா! கர்நாடகா தேர்தலில் ட்விஸ்ட்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் நடிகர் சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், மறைந்த மாஜி முதல்வர் பங்காரப்பாவின் மகளும், நடிகர் சிவராஜ் குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ் குமார் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் முன்னணி நடிகராக இருந்து மறைந்தவர் ராஜ்குமார். இவருக்கு சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் புனித் ராஜ்குமார் என 3 மகன்கள் இருந்தனர்.

இதில் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் முன்னணி நடிகர்களாக இருந்தனர். சமீபத்தில் புனித் ராஜ்குமார் மறைந்தார். கன்னட திரையுலகில் ஜொலித்தாலும் கூட ராஜ்குமாரின் குடும்பத்தினர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகின்றனர்.
இருப்பினும் கூட சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்வர் குமார் பங்காரப்பாவின் மகள் ஆவார். ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்த கீதா சிவராஜ் குமார் சமீபகாலமாக அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தான் நாளை கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.
கீதா சிவராஜ் குமார் நாளை எத்தனை மணிக்கு காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்பது பற்றிய விபரம் இன்று இரவு வெளியாக உள்ளது. மேலும் கீதா சிவராஜ் குமார் தம்பி மதுபங்காரப்பாவும் ஜேடிஎஸ் கட்சியில் இருந்த நிலையில் காங்கிரஸில் இணைந்தார். அவரை பின்பற்றியே கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.
கீதா சிவராஜ் குமாரின் தம்பி மதுபங்காரப்பா தற்போது சிவமொக்கா மாவட்டம் சொரபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதே தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள அவர்களின் சகோதரர் குமார் பங்காரப்பா உள்ளார்.

சொரபா தொகுதியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் அண்ணன்-தம்பியான குமார் பங்காரப்பா-மது பங்காரப்பா ஆகியோர் இடையே தான் போட்டி ஏற்படும். இந்த முறையும் அப்படியே ஏற்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் கீதா சிவராஜ் குமார் தனது தம்பியான மது பங்காரப்பாவையே ஆதரித்து வருகிறார். இந்த முறையும் அவரது பாணியில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
மேலும் கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைவது மாநில அளவிலும் அக்கட்சிக்கு வாக்குகளை பெற்று கொடுக்க உதவும். முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள், நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகள் என்ற முறையில் கீதா சிவராஜ் குமாருக்கு மாநிலம் முழுவதும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக அமையலாம்.
மேலும் நடிகர் சுதீப் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைவது என்பது சொரபா தொகுதி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் காங்கிரசுக்கு கைக்கொடுக்கும் என அக்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications