‛நானும் கவுடத்தி தான்’.. சாதி அரசியலில் நடிகை ரம்யா? விவாதத்தை கிளப்பிய வீடியோ! என்ன சொன்னார்?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நடிகையும், மண்டியா நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்பியுமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மண்டியாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, ‛‛நானும் கவுடத்தி தான். இதனை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது'' என கூறினார். இந்நிலையில் தான் நடிகை ரம்யா சாதி அரசியலை அவர் முன்னெடுக்கிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ்-ஜனதாதளம் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக போராடி வரும் நிலையில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் சித்தராமையா, தற்போதைய காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கூறிய தலைவர்கள் உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டு்ளளனர். இதில் நடிகையும், மண்டியா முன்னாள் எம்பியுமான ரம்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான் நடிகை ரம்யா நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சொந்த மாவட்டமான மண்டியாவில் நேற்று பிரியங்கா காந்தியின் பிரசாரம் இருந்த நிலையில் அதில் நடிகை ரம்யா பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்த வேளையில் நடிகை ரம்யா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ‛‛நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நான் போட்டியிடுவது பற்றி இன்னும் நினைக்கவில்லை. இன்னும் தேர்தலுக்கு காலம் உள்ளது. பார்க்கலாம்'' என்றார். இதையடுத்து, ‛‛திரைத்துறைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தது போல் அரசியலுக்கும் ரீஎன்ட்ரி எப்போது'' என கேட்டனர். அதற்கு, ‛‛சினிமாவில் தயாரிப்பாளர் என்ற பரிணாமத்தில் மீண்டும் வந்துள்ளேன். நான் எனக்காக முதலில் உழைக்க வேண்டும். இதனால் சினிமாவுக்கு வந்துள்ளேன். அரசியலிலும் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கிறேன்'' என்றார்.
இதையடுத்து, மண்டியாவில் இருப்பதாக கூறினீர்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் வெளியேறிவிட்டீர்கள் என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு ரம்யா, ‛‛நான் எப்போதும் மண்டியாவை சேர்ந்தவள் தான். நான் கவுடத்தி (ஒக்கலிகர் சமுதாய ஆண்கள் கவுடா, பெண்கள் கவுடத்தி). இதனை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது. இதனை யாராலும் மாற்ற முடியாது. என் தாயாரின் ஊர் இதுதான். என் தந்தை இங்கே தான் இருந்தார். நான் தேர்தலில் இங்கு தான் போட்டியிட்டேன். நான் கஷ்டப்பட்ட காலத்தில் மண்டியா மக்கள் என்னோடு இருந்தனர்.மக்கள் மீதான கவுரவம், மரியாதை எப்போதும் அப்படியே இருக்கும். வெறும் அரசியல் மட்டுமின்றி எப்போது மண்டியா மக்களுடன் நான் இருக்கிறேன்'' என்றார்.

இந்நிலையில் தான் நடிகை ரம்யா கவுடத்தி என கூறியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகை ரம்யாவும் மண்டியாவின் மகள் என்பதை கூற சாதியை முன்னிறுத்தி இருப்பது வருத்தமாக உள்ளது என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதற்கும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.
ரம்யாவின் தாயும்-தந்தையும் மண்டியாவில் வசித்து வந்தனர். மண்டியா, மைசூர், ராமநகர் உள்ளிட்ட மேலும் சில மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய மைசூர் பகுதியில் அதிகமாக ஒக்கலிகர் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்களின் பெயர்களில் கவுடா என்பது சேர்த்து கொள்ளப்படுகிறது. இந்த மக்கள் ஜேடிஎஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ளனர். ஏனென்றால் அக்கட்சியின் தேவேகவுடா ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளிலும் கடந்த முறை ஜேடிஎஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான ரம்யாவும் தன்னை கவுடத்தி என தெரிவித்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications