விரல் ‛மேஜிக்’.. சிறுவர்களை பார்த்ததுமே உற்சாகம்! ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி..‛கையை’ கவனீச்சிங்களா!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக பிரதமர் மோடி தனது ரூட்டை மாற்றி சிறுவர், சிறுமிகளுடன் சேர்ந்து உற்சாகமாக கலந்துரையாடியதோடு, மேஜிக் செய்வது போல் கைவிரல்களில் வித்தியாசமான சைகை காட்டியது கவனத்தை ஈர்த்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாவட்டங்களிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி, பிரசார வாகனங்களில் பேரணியாக சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலபுரகியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கலபுரகி என்பது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கோவின் சொந்த மாவட்டமாகும். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டை காங்கிரஸ் கட்சி உன்னிப்பாக கவனித்தது. கலபுரகியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசார வாகனத்தில் நின்று ஊர்வலமாக சென்றார். பிரதமர் மோடி மீது பூக்கள் தூவி பாஜகவினர் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் நோக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோடியை பார்க்க ஏராளமானவர்கள் வேலிக்கு அருகே காத்து நின்றனர். இந்த வேளையில் சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள் கும்பலாக நின்று மோடியை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த செல்போனை எடுத்து மோடியை வீடியோ, போட்டோ எடுத்தனர்.

இதை பார்த்து ஆர்வமான பிரதமர் மோடி தனது ரூட்டை மாற்றினார். அதாவது தான் சென்ற வழியில் இருந்து விலகி சிறுவர், சிறுமிகளை நோக்கி உற்சாகமாக நடந்து வந்து இந்தி மொழியில் கலந்துரையாடினார். மேலும் பிரதமர் மோடி தனது விரல்களை வெவ்வேறு வடிவங்களில் காண்பித்து மேஜிக் போல் அதனை செய்யக்கூறினார். பிரதமர் மோடி தனது விரல்களில் காட்டும் அடையாளம் போல் சிறுவர், சிறுமிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் விரல்களையும் அதேபோல் செய்து காண்பித்தனர்.
அதன்பிறகு இடது உள்ளங்கையில் வலது கையின் விரல்களை குவிப்பது, வலது கையில் இடது கையில் விரல்களை குவிப்பது என வேகமாக பிரதமர் மோடி செய்து காண்பித்தார். அவரை பின்தொடர்ந்து சிறுவர், சிறுமிகளும் அதனை வேகமாக செய்ய முயற்சித்தனர். இது சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
*******
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications