பாஜகவை விட ‛பெஸ்ட்’.. ஆனாலும் மோசம்! கர்நாடகாவில் காங்கிரஸ் டெபாசிட் இழந்த தொகுதிகளின் லிஸ்ட் இதோ
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருந்தாலும் கூட அந்த கட்சியும் சில தொகுதிகளில் படுதோல்வியடைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது டெபாசிட் தொகையை கூட பெறமுடியாமல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றுள்ள நிலையில் அந்த தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். 5 ஆண்டு சட்டசபை காலம் முடியும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2018 தேர்தலில் 104 இடங்களில் பாஜக வென்ற நிலையில் இந்த முறை பெரிய அளவில் சறுக்கலை சந்தித்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தனித்து ஆட்சியை அமைக்கிறது.
நீண்ட இழுபறிக்கு பிறகு முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நாளை மறுநாள் பெங்களூரில் நடக்கும் விழாவில் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையே தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் ரிசல்ட் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைத்தாலும் கூட அந்த கட்சியின் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்துள்ளனர். அதன்படி பெலகாவி மாவட்டம் அரபாவி, ராயபாக், பெலகாவி தெற்கு, ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தொகுதிகளில் டெபாசிட்டை காங்கிரஸ் வேட்பாளர்கள் இழந்துள்ளனர்.

மேலும் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, ஹாசன், உத்தர கன்னடா மாவட்டம் குமட்டா, சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா, சிவமொக்கா புறநகர், துமகூரு புறநகர், பெங்களூர் யஷ்வந்தபுரா என 11 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வியடைந்து டெபாசிட்டை இழந்துள்ளனர்.
இதேபோல் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 31 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தனர். இதில் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமாரை எதிர்த்த அமைச்சர் ஆர் அசோக்கும் ஒருவர் ஆவார். அப்படி பார்த்தால் பாஜகவை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறைந்த தொகுதிகளில் தான் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications