அமித்ஷா-எடியூரப்பா ஸ்கெட்ச்.. குருவை வீழ்த்திய சிஷ்யன்! ஜெகதீஷ் ஷெட்டர் படுதோல்வி! காரணம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டியை தாண்டி 115க்கும் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது சிஷ்யனிடமே உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் 34,289 ஓட்டு வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ள நிலையில் பின்னடைவை சந்தித்தது எப்படி? என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா பாஜகவில் மிக முக்கிய தலைவராக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். கடந்த 2012ம் ஆண்டில் முதல்வராக இருந்தார். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் தான் 2008 ல் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு எடியூரப்பா முறைகேடு புகாரில் சிக்கிய நிலையில் சதானந்த கவுடாவுக்கு பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானார்.

அதன்பிறகு 2013, 2018 தேர்தலில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டு ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் இந்த முறை பாஜகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில இணைந்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவை சந்திக்க தொடங்கினார். பாஜக சார்பில் களமிறங்கிய மகேஷ் தென்கின்காய் தொடர்ந்து முன்னிலை வகிக்க தொடங்கினார். இந்த தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர் தொடர்ந்து தோல்வியின் விளிம்புக்கு சென்றார். இறுதியில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் பாஜகவின் மகேஷ் தென்கின்காய் வெற்றி பெற்றார். ஜெகதீஷ் ஷெட்டர் 34,289 ஓட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.
இது பலருக்கும் ஷாக்கை கொடுத்தது. ஏனென்றால் இவர் 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இந்நிலையில் தான் அவரது பின்னடைவுக்கான காரணம் வெளியாகி உள்ளது.
அதாவது உப்பள்ளி-தார்வார் தொகுதியில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இவர்கள் முழுவீச்சில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக வேலை செய்தனர். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொகுதிக்கு நேரடியாக வந்து ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பினருடன் சில ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். இது பெரிய அளவில் வொர்க்அவுட் ஆகி உள்ளது.
அதேபோல் காங்கிரஸில் இருந்து மீண்டும் பாஜகவுக்கு வரும்படி எடியூரப்பா அழைப்பு விடுத்தார். ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் கேட்கவில்லை. இதனால் எடியூரப்பா நேரடியாக உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இது பாஜகவுக்கு கைக்கொடுத்துள்ளது.

மேலும் அந்த தொகுதி என்பது தொடர்ந்து பாஜகவின் கோட்டையாக தான் உள்ளது. இங்கு எளிதாக காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளால் வெல்ல முடியாது. அடிப்படையிலேயே பாஜக சித்தாந்தம் கொண்ட ஏராளமானவர்கள் தொகுதியில் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் தனது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து வெற்றி பெற்று விடலாம் என எண்ணினார். இது அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
அதேபோல் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷி உப்பள்ளி-தார்வார் எம்பியாக உள்ளார். இவரும் தொகுதியிலேயே தங்கி ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக வியூகங்கள் வகுத்தார். இது நன்றாக மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளது.
மேலும் தற்போது பாஜகவில் போட்டியிட்டு வெற்றியின் விளிம்பில் உள்ள மகேஷ் தென்கின்காய், ஜெகதீஷ் ஷெட்டர் தான் தனது குரு என கூறிவந்தார். அவருடன் சேர்ந்தே அரசியலில் பயணித்தார். இதனால் அவரது பிரசார நுணுக்கங்களை மகேஷ் தென்கினகாய் அறிந்து வைத்திருந்தார். இது அவருக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்நிலையில் தான் சிஷ்யன் மகேஷ் தென்கின்காயிடம், குரு ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைந்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications