4 முறை எம்.எல்.ஏவான சிடி ரவி தோல்வி.. சிக்மகளூர் 'வாஷ் அவுட்'.. பாஜக கோட்டையை தகர்த்த காங்கிரஸ்!
பெங்களூர் : சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தம்மையாவை விட சுமார் 7 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைச் சந்தித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி.
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1978 லோக்சபா தேர்தலில் சிக்மகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், வரலாற்று ரீதியாக, சிக்மகளூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துவந்தது. 2004ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த சிக்கமகளூரு தொகுதியில் அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.
2004 முதல் நடைபெற்ற அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜகவின் சிடி ரவி சிக்மகளூரில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு சிக்மகளூர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சி.டி.ரவி 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சங்கர் பி.எல்-ஐ தோற்கடித்து வெற்றி பெற்றார்.
சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் 5வது முறையாக வெற்றி பெற தீவிரமாக வேலை செய்தார் சிடி ரவி. சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
சிக்மகளூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் திம்மாஷெட்டி மற்றும் காங்கிரஸ் சார்பில் எச்.டி.தம்மையா ஆகியோர் களமிறங்கினர். காங்கிரஸ் வேட்பாளரான தம்மையா, சி.டி.ரவிக்கு நெருக்கமானவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.டி.ரவிக்கு நெருக்கமானவராக இருந்த தம்மையாவையே அவருக்கு எதிராக களமிறக்கியது காங்கிரஸ். இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிக்மகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்தார். சிடி ரவி.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமார் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தம்மையா. கர்நாடகா பாஜகவில் முக்கிய முகமாக பார்க்கப்படும் சிடி ரவி தோல்வியைத் தழுவியுள்ளார்.
சிக்மகளூர் தொகுதியில் தொடர்ச்சியாக 4 முறை எம்.எல்.ஏவாக இருக்கும் சி.டி.ரவியை தோற்கடித்ததோடு, சிக்மகளூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ் கட்சி.
முன்னர் பாஜகவில் இருந்து அண்மையில் காங்கிரஸில் இணைந்த தம்மையா சிக்மகளூர் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1967இல் சிஎம்எஸ் சாஸ்திரிக்குப் பிறகு சிக்மகளூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது லிங்காயத் எம்எல்ஏ தம்மையா ஆவார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications