Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா: ஆட்சி அமைக்கப்போவது யார்? Exit poll முடிவுகள் இன்றைய ரிசல்ட்டோடு மேட்ச் ஆகுமா? இத பாருங்க!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடகாவில் அடுத்து ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இந்த தேர்தல் முடிவுகளை ஒத்துப்போகுமா? எந்த நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்றைய ரிசல்ட்டோடு துல்லியமாகப் பொருந்தி வருகிறது?

தேசிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன.மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும்.

Karnataka election results 2023: Will exit poll results match these actual election results

தேர்தலுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஏராளமான நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலானவை காங்கிரஸ் கட்சி அடுத்து ஆட்சியமைக்கும் என்றே தெரிவித்திருந்தன. ஒருசில நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக ஆட்சி அமையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜக - காங்கிரஸ் இடையே மிகக் கடுமையான போட்டி இருக்கும், தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம், தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பிருக்கிறது என்பதே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உணர்த்தும் முடிவு.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று நடைபெறும் வாக்கு எண்னிக்கை முடிவுகளோடு ஒத்துப்போகுமா என்பது விரைவில் தெரியவரும்.. அதற்கு முன்பாக பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இங்கே தொகுப்பாக:

Republic TV-P MARQ

பா.ஜ.க - 85-100 இடங்கள்

காங்கிரஸ் - 94-108 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24-32

பிற - 2-6 இடங்கள்

TV 9 Bharatvarsh - Polstrat

பா.ஜ.க - 88-98 இடங்கள்

காங்கிரஸ் - 99-109 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21-26 இடங்கள்

பிற - 0-4 இடங்கள்

Suvarna News - Jan Ki Baat

பா.ஜ.க - 94-117 இடங்கள்

காங்கிரஸ் - 91-106 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 14-24 இடங்கள்

பிற - 0-2 இடங்கள்

Zee News - Matrize Agency

பா.ஜ.க - 79-94 இடங்கள்

காங்கிரஸ் - 103-118 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 25-33 இடங்கள்

பிற - 2-5 இடங்கள்

News Nation - CGS

பா.ஜ.க - 114 இடங்கள்

காங்கிரஸ் - 86 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 இடங்கள்

பிற - 3 இடங்கள்

ABP News - C Voter

பா.ஜ.க - 66-86 இடங்கள்

காங்கிரஸ் - 81-101 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20-27 இடங்கள்

பிற - 0-3 இடங்கள்

Matrize

காங்கிரஸ் - 108 இடங்கள்

பா.ஜ.க - 86 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 28 இடங்கள்

பிற - 2 இடங்கள்

P-MARQ

காங்கிரஸ் - 101 இடங்கள்

பா.ஜ.க - 92 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 28 இடங்கள்

பிற - 3 இடங்கள்

JAN KI BAAT

காங்கிரஸ் - 106 இடங்கள்

பா.ஜ.க - 99 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 19 இடங்கள்

பிற - 0 இடங்கள்

TV9-POLSTRAT

காங்கிரஸ் - 104 இடங்கள்

பா.ஜ.க - 93 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 24 இடங்கள்

பிற - 3 இடங்கள்

CGS

காங்கிரஸ் - 86 இடங்கள்

பா.ஜ.க - 114 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 21 இடங்கள்

பிற - 3 இடங்கள்

Times Now

காங்கிரஸ் - 113 இடங்கள்

பா.ஜ.க - 85 இடங்கள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 23 இடங்கள்

பிற - 3 இடங்கள்

India Today

காங்கிரஸ் - 122-140

பாஜக - 62-80

மதச்சார்பற்ற ஜனதா தளம் - 20-25

மற்றவை - 0-3

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+