பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே சறுக்கும் பாஜக.. கலக்கத்தில் மோடி - அமித் ஷா அன் கோ!

கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக மோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்... சரிந்தது ரெட்டி சகோதரர்கள் சாம்ராஜ்யம்

    பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக மோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது.

    கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

    ஒரு நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பாஜக வென்றுள்ளது. மற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

    தொடர் தோல்வி

    தொடர் தோல்வி

    பாஜக கட்சி நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வி அடைவது இது புதிதல்ல. மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற 17 லோக்சபா இடைத் தேர்தல்களில் எதிலும் பாஜக சரியாக சோபிக்கவில்லை. 17 தேர்தல்களில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆண்டு நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தலிலும் சரியாக பாஜக செயலாற்றவில்லை.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கோரக்பூர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வென்ற தொகுதி; புல்பூர் உ.பி. துணை முதல்வர் கேசவ்பிரசாத் மவுரியா வென்ற தொகுதி; ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. அதேபோல் பாஜகவின் கோட்டையான கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியிலும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    காங்கிரஸ் இந்த தேர்தல்களின் மூலம் முக்கியமான விஷயம் ஒன்றை கற்றுக்கொண்டது. கூட்டணிதான் அந்த கட்சிக்கு பலம் அளிக்கும் என்று கற்றுக்கொண்டு இருக்கிறது. உத்தர பிரதேசத்திலும் இதேதான் நடந்தது. குஜராத்திலும் காங்கிரஸ் ஆதரவு அளித்த சுயேச்சை வெற்றி பெற்று இருக்கிறார்கள். தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து கர்நாடகாவில் சிறப்பான வெற்றியை பாஜக ருசித்து இருக்கிறது.

    பெரிய ஏமாற்றம்

    பெரிய ஏமாற்றம்

    இது பாஜக கட்சிக்கு பெரிய ஏமாற்றம் அளித்து இருக்கிறது. ஏன் என்றால், கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவான சூழ்நிலை கொஞ்சம் நிலவியது. ஆனால் காங்கிரஸ் - மஜத கூட்டணியே ஆட்சியை பிடித்தது. இதையடுத்து இந்த கூட்டணி மக்கள் விரோத கூட்டணி, எதிர்வரும் தேர்தலில் அதை மக்கள் உணர்த்துவார்கள் என்று பாஜக கூறியது. ஆனால் பாஜக நினைத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

    மோடி அலை

    மோடி அலை

    இதனால் மோடி அலை தொடர்ந்து ஓய்ந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் சிறந்த வெற்றி அரசியல் கூட்டணியாக பார்க்கப்படும் மோடி - அமித் ஷா கூட்டணிக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்படுவது பாஜகவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மோடியை வைத்தே 2019 லோக் சபா தேர்தலை சந்திப்பதா, இல்லை யோகிக்கு தாவுவதா என்றும் பாஜகவை யோசிக்க வைத்துள்ளது.

    English summary
    Karnataka By - Election Results gives a nightmare to Modi- Shah and Co.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X