பாஜக-16! காங்கிரஸ்-12.. பெங்களூரின் புதிய 28 எம்எல்ஏக்கள் இவர்கள் தான்.. தொகுதி வாரியாக முழு லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து இன்று ரிசல்ட் வெளியாகி உள்ளது. பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 16 இடங்ளிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளார். விரைவில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உள்ளார். மாறாக பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 16 இடங்ளிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
பிடிஎம் லே-அவுட்: பிடிஎம் லேஅவுட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்க ரெட்டி வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ரீதராவை 9222 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பேடராயனபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணபைரேகவுடா 38,204 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். இங்கு பாஜகவின் தம்மேஷ் கவுடா தோல்வியடைந்தார்.
ஹெப்பால் தொகுதி: கோவிந்தராஜ் நகரில் காங்கிரஸ் கட்சியின் பிரியா கிருஷ்ணா 12,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜகவின் உமேஷ் செட்டியை தோற்கடித்தார். ஹெப்பால் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிஎஸ் சுரேஷ் வெற்றி பெற்றார். இவர் பாஜக வேட்பாளர் ஜெகதீஷா கட்டாவை 30,754ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சாந்தி நகர்: சர்வக்ஞ நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கேஜே ஜார்ஜ் 55,768 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட பத்மநாப ரெட்டி தோல்வியடைந்தார். சாந்திநகரில் காங்கிரஸ் வேட்பாளர் என்ஏ ஹாரீஸ், பாஜகவின் சிவக்குமாரை 7125 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சிவாஜி நகர்: சிவாஜிநகரில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்சத் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சந்திராவை 23,194 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். விஜயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட பாஜகவின் ரவீந்திராவை 7324 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சாம்ராஜ்பேட்டை: சாம்ராஜ்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமது கான் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மாஜி ஐபிஎஸ் அதிகாரியான பாஸ்கர் ராவை 53,953 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஆனேக்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிவண்ணா 31,325 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சீனிவாஸ் சி ஹூல்லஹள்ளியை தோற்கடித்தார்.
புலிகேசி நகர்: புலிகேசி நகரில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசா வெற்றி பெற்றார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் அகண்ட சீனிவாச மூர்த்தியை 62,210 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். காந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்றார். இவர் 105 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜகவின் சப்தகிரி கவுடாவை தோற்கடித்தார்.
சிவி ராமன் நகர்: பசவனகுடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவி சுப்பிரமணியா வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் யுபி வெங்கடேசை விட 54,978 ஓட்டுகள் அதிகம் பெற்று வாகை சூடினார். சிவி ராமன் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு 16,395 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் குமார் தோல்வியடைந்தார்.
எலகங்கா: சிக்பேட்டை தொகுதியில் பாஜக வேட்பாளர் உதய் கருடாச்சார் 12,113 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரைஎதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர்பி தேவராஜ் தோல்வியடைந்தார்.
பெங்களூர் எலகங்காவில் பாஜக வேட்பாளர் விஸ்வநாத் வெற்றி றெப்றார். இவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் கேசவராஜண்ணாவை 64,110 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஜெயநகர்: ஜெயநகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. முதலில் காங்கிரஸ் கட்சியின் சவுமியா ரெட்டி 160 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி மறு ஓட்டு எண்ணிக்கை கோரினார். ரீகவுண்டிங் நடந்த நிலையில் 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் சிகே ராமமூர்த்தி வெற்றி பெற்றார். சவுமியா ரெட்டி கண்ணீருடன் ஓட்டு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.
யஷ்வந்தபுரா: யஷ்வந்தபுராவில் பாஜகவின் எஸ்டி சோமசேகர் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதரி்த்து போட்டியிட்ட ஜேடிஎஸ் கட்சியின் ஜவரே கவுடாவை 15,118 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கேஆர்புரம் தொகுதியில் பாஜகவின் பைரதி பசவராஜ் 24,301 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் மோகனை வீழ்த்தினார். பொம்மனஹள்ளி தொகுதியில் பாஜகவின் சதீஷ் ரெட்டி 24,215 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் உமாபதி சீனிவாச கவுடா தோல்வியடைந்தார்.
மகாதேவபுரா: மகாதேவபுரா தொகுதியில் பாஜகவின் மஞ்சுளா வெற்றி பெற்றார். இவர் 44,501 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் நாகேசை வீழ்த்தினார். மகாலட்சுமி லே-அவுட்டில் பாஜகவின் கோபாலய்ய 51,565 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் கேசவமூர்த்தியை வீழ்த்தினார்.
தாசரஹள்ளி: பெங்களூர் தாசரஹள்ளியில் பாஜக வேட்பாளர் முனிராஜூ வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜேடிஎஸ் கட்சியின் மஞ்சுநாதாவை 9,194 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்கே ரமேசை 49,699 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மல்லேஸ்வரம்: மல்லேஸ்வரம் தொகுதியில் பாஜகவின் அஸ்வத் நாராயணன் வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் அனுப் ஐயங்காரை 41302 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பத்மநாபநகரில் பாஜக வேட்பாளர் அசோக் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட் காங்கிரஸ் கட்சியின் ரகுநாத் நாயுடுவை 55,175 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மாறாக அசோக் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமாரை எதிர்த்து தோல்வியடைந்தார்.
ராஜாஜிநகர்: ராஜாஜிநகரில் பாஜகவின் சுரேஷ் குமார் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணாவை விட 8,060 ஓட்டுகள் அதிகம் பெற்று சுரேஷ் குமார் வென்றார். ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் பாஜகவின் முனிரத்னா 11,842 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் குசுமாவை வீழ்த்தினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications