காரில் இருந்து திடீரென கீழே விழுந்த சித்தராமையா.. தொங்கியபடி கையசைத்ததால் சம்பவம்.. ஷாக் வீடியோ
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காரில் தொங்கியபடி தொண்டர்களுக்கு கையசைத்தபோது முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா திடீரென தவறி விழுந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 223 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அந்த கட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக வெளியாகும் கருத்து கணிப்புகளில் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன. மேலும் பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. மாறாக காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறும் என தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தான் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் கர்நாடகா மண்ணின் மைந்தர்களான காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சித்தராமையா இன்று விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டார். அவர் ஹெலிகாப்டரில் ஒசப்பேட்டைக்கு சென்றார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய சித்தராமையா காரில் ஏறினார். அப்போது அவர் தன்னை பார்க்க அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி கையசைத்தார்.
இந்த வேளையில் அவர் காரில் டிரைவரின் அருகே முன்பக்கத்தில் இருக்கும் சீட் அருகே நின்று கையசைத்தார். அதன்பிறகு அவர் காரில் அமர நினைத்தார். இந்த வேளையில் திடீரென்று நிலைத்தடுமாறிய சித்தராமையாவில் காரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கு இருந்த அவரது பாதுகாவலர்கள் சித்தராமையாவை தாங்கிப்பிடித்தனர்.
அதன்பிறகு சித்தராமையாவை காரின் இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர். அவரது உதவியாளர் நீர்ஆகாரத்தை வழங்கினார். காரில் இருக்கையில் அமர்ந்து அதனை வாங்கி சித்தராமையா பருகினார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சித்தராமையா காரில் இருந்து தவறி விழுவதை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications