‛‛113’’.. திணறப்போகும் பாஜக, காங்கிரஸ்.. கர்நாடகாவில் கிங்மேக்கராகும் ஜேடிஎஸ்? சர்வேயில் ட்விஸ்ட்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி புதிய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது காங்கிரஸ், பாஜகவுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் வகையில் உள்ளது. அதோடு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இருகட்சிகளும் ஜேடிஎஸ் கட்சியின் சப்போர்ட்டை பெற வேண்டும் என்பதை இந்த கருத்து கணிப்பு உறுதி செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக, இழந்த ஆட்சியை மீட்டெடுக்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் போராடி வருகின்றன. மேலும் ஆம்ஆத்மி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ உள்ளிட்ட வேறு சில கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க களத்தில் குதித்துள்ளன.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய சூழலில் காங்கிரஸ் சார்பில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 212 வேட்பாளர்களும், ஜேடிஎஸ் சார்பில் 93 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 140 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கருத்து கணிப்பு: பாஜகவில் பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மாற்று கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக சீ்ட கிடைக்காத எம்எல்ஏக்களை சமாதானம் படுத்தும் பணியையும் தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சில கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கும், சில கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட பெரும்பாலானவை தொங்கு சட்டசபை அமையும் என்றே கூறியுள்ளன.

புதிய கருத்து கணிப்பு: இந்நிலையில் தான் தற்போது சவுத் பர்ஸ்ட்(South First) எனும் நியூஸ் வெப்சைட் மற்றும் பிபிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) எனும் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 56 சட்டசபை தொகுதிகளை குறிவைத்து 280 பூத்களை சேர்ந்த 5,600 பேரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டன.
கருத்து கணிப்பு முடிவு: இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் காங்கிரஸ், பாஜகவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. மாறாக இருகட்சிகளும் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் ஜேடிஎஸ் கட்சியை நம்பி இருக்க வேண்டும் என்பதை இந்த கருத்து கணிப்பு காட்டுகிறது. மேலும் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள இருந்தாலும் இருகட்சிகளுக்கும் இடையேயான தொகுதிகளில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மும்பை கர்நாடகா: கர்நாடகாவை பொறுத்தமட்டில் 6 மண்டலங்கள் உள்ளன. மண்டல வாரியாக பார்த்தால் மும்பை கர்நாடகா பகுதியில் மொத்தமுள்ள 51 தொகுதிகளில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 தொகுதிகளிலும், கேபிஜேபி கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 21 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், ஜேடிஎஸ் 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா: மத்திய கர்நாடகா உள்ள 37 தொகுதிகளில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் ஜேடிஎஸ் 2 தொகுதகிளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்த கடலோர கர்நாடகா மண்டலத்தில் மொத்தமுள்ள 19 தொகுதிகளில் பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் யார் பலம்: இந்த வரிசையில் ஓல்டு மைசூர் மண்டலத்தில் மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் ஜேடிஎஸ் 26 இடங்களிலம், பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை பொறுத்தமட்டில் 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும், ஜேடிஎஸ் 4 இடங்களிலும் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு எத்தனை இடம்: மேலும் இந்த ஒட்டுமொத்த கருத்து கணிப்பின்படி பார்த்தால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறலாம் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் 80 இடங்களில் காங்கிரஸ் வென்ற நிலையில் இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் எனவும், இருப்பினும் தனி மெஜாரிட்டி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு எத்தனை இடம்: அதேவேளையில் பாஜக 90 முதல் 100 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதில் இருந்து சரிய வாய்ப்பு உள்ளது என இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேடிஎஸ் நிலை என்ன: மேலும் ஜேடிஎஸ் கட்சி 25 முதல் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் ஜேடிஎஸ் 37 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இந்த முறை அந்த கட்சி சரிவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தனித்து ஆட்சியை பிடிக்கும் வகையில் 113 இடங்கள் கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சி தான் கிங்மேக்கராகும் என்பதையும் இந்த கருத்து கணிப்பு உறுதி செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications