எடப்பாடிக்கு செக்? ஓ பன்னீர் செல்வம் அணியிடம் எடியூரப்பா சொன்ன ஒற்றை வார்த்தை! இதுதான் முக்கியமே!
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட காய்நகர்த்தி வரும் நிலையில் இன்று ஓ பன்னீர் செல்வம் அணியினர் இன்று கர்நாடகா மாநில முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். இந்த வேளையில் அவர் கடிதம் ஒன்றை வழங்கியதோடு, எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிக்க வேண்டும் என கூறியதோடு, தேர்தலில் சீட் ஒதுக்க கோரியுள்ளனர். இதை கேட்ட எடியூரப்பா ஒற்றை வரியில் அளித்த பதில் தான் தற்போது பேசும்பொருளாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். கர்நாடகாவில் ஏற்கனவே கேஜிஎப் எனும் கோலார் தங்கவயல் மற்றும் பெங்களூர் காந்திநகர் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருப்பதை குறிப்பிட்டு அவர்கள் சீட் பெற முயற்சித்து வருகின்றனர்.

அதன்படி கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பாஜகவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தான் சென்னையில் விரைவில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடகா தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளார்.
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் கர்நாடகா தேர்தலில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று ஓ பன்னீர் செல்வம் சார்பில் பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவை புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஓபிஎஸ் அணியின் கர்நாடக மாநில செயலாளர் குமார் , மாவட்ட செயலாளர் முனிரத்தினம் மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது எடியூரப்பாவிடம் அவர்கள் ஒரு கடிதம் வழங்கினர். மேலும் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது கர்நாடக தமிழர்களிடம் அதிமுகவுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அந்த வகையில், அதிமுக தொண்டர்களிடம் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அதிகம் உள்ளது என எடுத்து கூறினர்.
இதுதவிர தேர்தல் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. எங்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் அணியினர் கேட்டு கொண்டனர். இதை கேட்ட எடியூரப்பா ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். அதாவது கட்சி மேலிடத்திலிருந்து வருகிற அட்வைஸ்படி தான் பேசமுடியும் என ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.
இதன்மூலம் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கர்நாடகா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு முறையே தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதா? இல்லாவிட்டால் யாருக்காவது ஒருவருக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கி மற்றொருவை கைவிடுகிறதா? அல்லது இருவருக்குமே தொகுதிகள் வழங்காமல் புறக்கணிப்பு செய்ய உள்ளதா? என்ற 3 கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுகவில் சட்ட பேராட்டங்களுக்கு நடுவே பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெற்ற நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக உள்ளார். தமிழகத்தில் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே கர்நாடகா தேர்தலை மையப்படுத்தி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பது பாஜகவின் அடுத்தக்கட்ட முடிவில் தான் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications