டிகே சிவக்குமாருக்கு செக் வைத்த பாஜக.. குறுக்கே வரும் டிகே சுரேஷ்.. பத்மநாபநகரில் போட்டி! பலேபிளான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை வீழ்த்த அமைச்சர் ஆர் அசோக்கை பாஜக கனகபுரா தொகுதியில் நிறுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அசோக் போட்டியிடும் இன்னொரு தொகுதியான பெங்களூர் பத்மநாபநகரில் டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி என எந்த கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் முன்னாள் முதல் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா அல்லது கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவர் தான் முதல்வராவார்கள்.
இதனால் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை தோற்கடிக்க தற்போதைய அமைச்சர்களை பாஜக களமிறக்கி உள்ளது. அதன்படி மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து அமைச்சர் சோமண்ணா பாஜகவில் போட்டியிடுகிறார். சோமண்ணா வருணா தொகுதி மட்டுமின்றி சாம்ராஜ்நகர் சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் டிகே சிவக்குமார் போட்டியிடும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் அமைச்சர் அசோக்கை பாஜக நிறுத்தி உள்ளார். இந்த தொகுதியோடு சேர்த்து அசோக் பெங்களூர் பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
கனகபுரா தொகுதியில் கடந்த 3 முறை வெற்றி பெற்ற டிகே சிவக்குமார் தற்போது 4வது வெற்றிக்கு குறிவைத்துள்ளார். இங்கு அமைச்சர் அசோக்கை பாஜக நிறுத்தி உள்ளதால் போட்டி வலுவாகி உள்ளது. ஏனென்றால் டிகே சிவக்குமார், அசோக் ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் ஓட்டுகள் பிரியலாம் என கூறப்படுகிறது. இதனால் டிகே சிவக்குமார் வழக்கத்தை விட அதிக நேரம் தொகுதியில் செலவிட வேண்டியிருக்கும் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

இந்நிலையில் தான் ஆர் அசோக்கிற்கு எதிராக பெங்களூர் பத்மநாப நகரில் பலம்வாய்ந்த வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரகுநாத் நாயுடு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் இன்று காங்கிரஸ் வேட்பாளராக டிகே சிவக்குமாரின் தம்பியான டிகே சுரேஷ் பத்மநாபநகர் தொகுதியில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிகே சிவக்குமாரின் தம்பியான டிகே சுரேஷ் தற்போது ராமநகர் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக உள்ளார். தனது அண்ணன் டிகே சிவக்குமாரை கனகபுராவில் தோற்கடிக்க அமைச்சர் அசோக்கை பாஜக நிறுத்தி உள்ள நிலையில் பத்மநாபநகரில் அமைச்சர் அசோக்கை வீழ்த்த காங்கிரஸ் சார்பில் டிகே சுரேஷ் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛எனக்கு எதிராக ஜேடிஎஸ், பாஜகவினர் செஸ் விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிராக நானும் செஸ் விளையாட போகிறேன். எனது தம்பி டிகே சுரேஷ் பத்மநாபநகரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிகே சுரேஷ் கூறுகையில், ‛‛எனக்கு மாநில அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. இருப்பினும் கட்சியின் நலன் மிகவும் முக்கியம். அதேபோல் கட்சி தொண்டர்கள், தலைவர்களின் விருப்பத்துக்கு கட்டுப்பட வேண்டும்.வேட்புமனு தாக்கல் செய்வதற்காகு தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர். நானும் தயாராக இருக்கிறேன்'' என்றார்.
அதேபோல் பத்மநாபகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரகுநாத் நாயுடு கூறுகையில், ‛‛பத்மநாபநகர் தொகுதியில் டிகே சுரேஷ் போட்டியிட்டால் நான் எனது மனுவை வாபஸ் பெறுவேன். என் நலனை விட கட்சியின் நலனை முக்கியம்'' என்றார். இதனால் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமாருக்கு கட்டம் கட்ட நினைக்கும் அமைச்சர் ஆர் அசோக்கிற்கு எதிராக பத்மநாபநகர் தொகுதியில் டிகே சுரேஷ் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications