கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்படும் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் பாதிப்பு கர்நாடகா மாநிலத்தில் பதிவானது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் 149 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தொற்றானது அதிகமாகவே பரவி வந்தது. அது போல் கொரோனா பாதிப்பும் அதிகமாகவே இருந்து வந்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அது போல் இரவு நேர ஊரடங்கும் அங்கு ஏற்கெனவே அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கோவிட் நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவைகளில் 50 சதவீத ஆட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். அதே போல் திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் அனுமதி இல்லை. மூடிய அரங்காக இருந்தால் 100 பேர் மட்டுமே திருமண விழாவில் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,754 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை நீக்க வேண்டும் என வர்த்தகர்களும் எதிர்க்கட்சியினரும் கர்நாடகா மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இன்றைய தினம் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை ரத்து செய்வது என மாநில அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் அமலில் இருந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications