10, பிளஸ் 2 பாஸ் மார்க் குறைப்பு.. எஸ்எஸ்எல்சிக்கு 33, +2வுக்கு 30 மதிப்பெண் போதும்.. அறிவித்த அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் 10ம் வகுப்பு மற்றும் பியூசி 2ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பாஸ் மார்க் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்கள் 33 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும். பியூசி 2ம் ஆண்டு மாணவ-மாணவிகள் 30 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும். இந்தமதிப்பெண் குறைப்பு இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். தமிழகத்தை போல் கர்நாடகாவிலும் 10 மற்றும் பியூசி II( பிளஸ் 2)வில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாஸாக முடியும்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளாக மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் குறைந்து வருகிறது. இதனால் பாஸ் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கர்நாடகா பள்ளி தேர்ச்சி மற்றுமு் மதிப்பீட்டு வாரியம் இதற்கான பரிந்துரையை வழங்கியது.
அதன்படி, எஸ்எஸ்எல்சியில் ஒரு பாடத்தில் 35 சதவீத மதிப்பெண்ணுக்கு பதில் 33 சதவீத மதிப்பெண்ணும், பியூசி IIம் ஆண்டு மாணவ - மாணவிகள் என்றால் 35 சதவீத மதிப்பெண்ணுக்கு பதில் 30 சதவீத மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டது. இதற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது 10ம் வகுப்பு மற்றும் பியூசி II (பிளஸ் 2) மாணவ-மாணவிகளுக்கான பாஸ் மார்க் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண்ணுக்கு பதில் 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும். அதேவேளையில் பியூசி II ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 சதவீதத்துக்கு பதில் 30 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 10ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பாட தேர்வுகளில் 30 மதிப்பெண் எடுத்தால் போதும். அதேவேளையில், Internal - External-யை சேர்த்தால் 33 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பாடபத்தில் சராசரியாக 33 மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்ணை எடுத்து கொண்டால் 625க்கு 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பியூசி IIம் ஆண்டை எடுத்து கொண்டால் ஒவ்வொரு பாட தேர்வுகளில் தேர்வு மற்றும் பிராக்டிக்கல்/இன்டர்னல் உள்ளிட்டவற்றை சேர்த்து கட்டாயம் 30 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதேவளையில் மொத்த மதிப்பெண் என்று எடுத்து கொண்டால் 600க்கு 198 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாஸ் மதிப்பெண் குறைப்பு நடைமுறை நடப்பு கல்வி ஆண்டான 2025-2026ல் அமலுக்கு வர உள்ளது. இது ரெகுலர், ரிப்பீட், தனியாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அப்போது கல்வித்துறைக்கு 701 கடிதங்கள் ஆதரவாகவும், 8 கடிதங்கள் எதிராகவும் வந்தன. இதையடுத்து பாஸ் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ-மாணவிகள் வரவேற்றுள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications