"ஏன் ஹலால் இல்லாத இறைச்சியை விற்க மாட்டீங்களா?" முஸ்லீம் வியாபாரியை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் இப்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், ஹலால் இறைச்சி விவகாரம் இப்போது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக அங்கு பல்வேறு மாவடங்களில் மாணவர்கள் போராட்டமும் தீவிரமாக நடைபெற்றது.
கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இப்போது தான் அங்கு ஹிஜாப் விவகாரம் சற்றே ஓய்ந்துள்ளது. இந்நிலையில், இப்போது அங்கு ஹலால் இறைச்சி தொடர்பான சர்ச்சை கிளம்பி உள்ளது.

கர்நாடகா
கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் சமூக வலைத்தளங்களில் ஹலால் இறைச்சி குறித்து சில தகவல்கள் பரவி வருகிறது. இந்துக்கள் அனைவரும் ஹலால் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதில் கூறப்பட்டு வருகிறது. உகாதி பண்டிக்கைக்கு மறுநாள், அசைவம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த சடங்கைத் தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இறைச்சி வியாபாரி
சமீபத்தில் தான் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூட, ஹலால் இறைச்சிக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இந்தச் சூழலில் ஷிவமொகா மாவட்டத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பத்ராவதியில் ஒரு முஸ்லிம் இறைச்சி விற்பனையாளரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் இகு கொசர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஷிவமொகா எஸ்பி லக்ஷ்மி பிரசாத் தெரிவித்தார்.

பஜ்ரங் தள்
கடந்த புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் ஹலால் இறைச்சிக்கு எதிராக ஹொசமானே பகுதியில் பிரசாரம் செய்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து முஸ்லிம் இறைச்சி வியாபாரி தௌசிப் என்பவரை அவர்கள் மிரட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பஜ்ரங் தள் உறுப்பினர்கள் அந்த இறைச்சி வியாபாரியை ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்குமாறு வலியுறுத்தி உள்ளனர். அத்தகைய இறைச்சி தயாராக இல்லை என்றும், அதை ஏற்பாடு செய்வதாகவும் இறைச்சி வியாபாரி தௌசிப் தெரிவித்துள்ளார்.

மற்றொரு தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தௌசிப்பை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார். இதுவரை 5 வலதுசாரி பஜ்ரங் தள் உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதே ஷிவமொகா மாவட்டத்தில் பழைய பத்ராவதி பகுதியில் ஹலால் அல்லாத இறைச்சியை விற்க வலியுறுத்தி ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக அதே பஜ்ரங் தள உறுப்பினர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பசவராஜ் பொம்மை
ஹலால் இறைச்சி விவகாரம் கடந்த சில நாட்களாகவே பேசுபொருளாகி உள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, "ஹலால் பிரச்சினை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். சில வலதுசாரி அமைப்புகள் ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது குறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில்,"நாங்கள் வலதுசாரி அல்லது இடதுசாரிகள் அல்ல.. நடுநிலையாகவே இருப்போம்" என்றார்.

சி.டி.ரவி
முன்னதாக இது தொடர்பாக பாஜகவின் சி.டி.ரவி பேசுகையில். "ஹலால் என்பது பொருளாதார ஜிஹாத். முஸ்லிம்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. ஹலால் இறைச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தும் போது, அதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications