மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கீடு- ஆளுநர் அனுமதிக்கு எதிரான சித்தராமையா மனு மீது ஹைகோர்ட் இன்று விசாரணை!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கிய விவகாரத்தில் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் முக்கிய விசாரணை நடத்த உள்ளது. மூடா நில மோசடி விவகாரத்தில் தம் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிரான சித்தராமையா மனுவை இன்று அம்மாநில உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
மூடா நிறுவனம் 14 வீட்டு மனைகளை முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு ஒதுக்கீடு செய்தது சட்டவிரோதம் என்கிறது பாஜக. ஆனால் மனைவி பெயரிலான நிலத்தை மூடாதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது; அதற்கு நஷ்ட ஈடுதான் இந்த 14 வீட்டு மனைகள் என்கிறார் சித்தராமையா.

இந்த விவகாரத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இது கர்நாடகா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆளுநர் கெலாட்டின் இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் ஆளுநரின் இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக, சித்தராமையா ராஜினாமா செய்ய கோரி பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் போராட்டம் நடத்தின.
மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கும் தொடர்ந்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மீது விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மனு மீது விசாரணை நடத்த உள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனுவை விசாரிக்க இருக்கிறார். இன்றைய கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications