பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவதில் முறைகேடு.. விசாரணை நடத்த கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு
பெங்களூர்: பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா புகார் அளித்து இருந்தார். பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை பெட்களை ஒதுக்க பிபிஎம்பி மாநகராட்சி சார்பாக வார் ரூம் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு பெட்களை புக் செய்ய லஞ்சம் வாங்கப்படுகிறது. அதிக விலை கொடுக்கும் நபர்களுக்கு பெட் ஒதுக்கப்படுகிறது என்று தேஜஸ்வி சூர்யா புகார் வைத்தார்.
ஒரு நபர் ஒரு பெட்டை புக் செய்து இருந்தாலும் கூட, அதிக பணம் கொடுக்கும் நபர்களுக்கு பெட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் நிறைய லஞ்சம் கை மாறுகிறது என்று தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் மருத்துவமனையில் பெட் ஒதுக்குவதில் முறைகேடு நடப்பது குறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தனி குழுவை நியமிக்க வேண்டும், இதில் போலீஸ் அதிகாரிகள், சைபர் கிரைம் அதிகாரிகள் இடம்பெற வேண்டும், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் குழுவை மேற்பார்வையிட வேண்டும் என்று கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் இதற்காக இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏற்கனவே விசாரணை குழு நியமித்துவிட்டதாக கர்நாடக அரசு ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த முறைகேட்டில் பெங்களூர் மாநகராட்சியில் வேலை பார்க்கும் 17 இஸ்லாமிய ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்து இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் போலீஸ் விசாரணையில் இவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால் கடந்த 10ம் தேதி இவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications