மோதிரம் வாங்கிக் கொடுத்து.. மகளை கொலை செய்த தந்தை.. கண்ணை மறைத்த ஜா'தீ' வெறி - கர்நாடகாவில் 'ஷாக்'
பெங்களூர்: வேற்று ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் மூழ்கடித்து தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்வதற்கு முன்பு ஹோட்டலுக்கு சென்று தனது மகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுத்தும், அவர் ஆசையாக கேட்ட தங்க மோதிரத்தையும் அவரது தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
வேறு ஜாதி பையனை காதலிக்காதே என பல முறை கூறியும் மகள் கேட்காததால், அவரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒரே மகள் - அதிக பாசம்..
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா (52). இவரது மனைவி சீதா. இவர்களுக்கு சுஹாஷினி (20) என்ற மகள் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரயில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். ஒரே மகள் என்பதால் அவர் மீது ஓம்கார் கவுடா அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார்.

வேற்று ஜாதி இளைஞரை..
இதனிடையே, சுஹாஷினி தனது கல்லூரியில் படிக்கும் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிந்ததால், மகள் சுஹாஷினியை அழைத்து ஓம்கார் கவுடா கண்டித்துள்ளார். "வேறு ஜாதியை சேர்ந்த பையனை நமது உறவினர்கள் ஏற்க மாட்டார்கள்.. எனவே இந்த காதல் வேண்டாம்" எனக் கூறியுள்ளார். ஆனால், சுஹாஷினியால் அந்த இளைஞருடனான காதலை விட முடியவில்லை. பெற்றோர் எவ்வளவோ கூறியும் தனது காதலில் உறுதியாக இருந்தார் சுஹாஷினி.

கொலை செய்ய திட்டம்..
மகளிடம் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காததால், ஓம்கார் கவுடாவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இனி விட்டால், அந்த இளைஞனை மகள் திருமணம் செய்து கொள்வார் என பயந்த அவர், மகளை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மாதம் 31-ம் தேதி, கல்லூரிக்கு புறப்பட்ட மகளிடம், பக்கத்து தியேட்டரில் நல்ல படம் ஓடுகிறது. பார்த்து வரலாம் என ஓம்கார் அழைத்துள்ளார். தந்தையே படத்துக்கு அழைத்ததால் சுஹாஷினிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

தங்க மோதிரம் வாங்கிக் கொடுத்து..
இதையடுத்து, சந்தோஷமாக தந்தையுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார் சுஹாஷினி. ஆனால், அவர்கள் செல்வதற்குள் அங்கு திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்கத்தில் உள்ள பெரிய ஓட்டலுக்கு சுஹாஷினியை அழைத்து சென்ற ஓம்கார் கவுடா, மகளுக்கு என்னென்ன பிடிக்குமோ அதையெல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், நகை கடைக்கும் அழைத்து சென்று ஒரு தங்க மோதிரத்தையும் மகளுக்கு வாங்கிக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக, அருகில் இருந்த பெரிய ஏரிக்கு சுஹாஷினியை அழைத்துச் சென்ற தந்தை திடீரென அவரை நீரில் தள்ளினார்.

கைது நடவடிக்கை
மகள் தண்ணீரில் மூழ்கி திணறுவதை பார்க்க முடியாமல் ஓம்கார் கவுடா அங்கிருந்து வந்துவிட்டார். பின்னர் போலீஸார் சுஹாஷினியின் உடலை மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, மகளை நான்தான் கொலை செய்தேன் என ஓம்கார் தெரிவித்தார். இதன்பேரில், போலீஸார் ஓம்காரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications