பெங்களூரில் Half Helmet அணிய தடை.. கர்நாடகா முழுதும் அமலுக்கு வருகிறது - அமைச்சர் அறிவிப்பு
பெங்களூர்: ''இந்த ஆண்டு இறுதிக்குள் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் டூவீலர்களில் Half Helmet அணிவதை தடை செய்வதற்கான நடைமுறையை தொடங்கி உள்ளது'' என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கூறினார்.

பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் Half Helmet-யை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் அரை ஹெல்மெட்டை தடை செய்வது தொடர்பான சட்ட ஆலோசனை கோரி அரசுக்கு கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா போக்குவரத்து துறை மற்றும் உள்துறை சார்பில் முன்மொழிவு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கர்நாடகாவில் அரை ஹெல்மெட் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோரை நாங்கள் குறிவைக்க உள்ளோம் என்று அமைச்சர் பைரதி சுரேஷ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று பெங்களூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கர்நாடகா போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் கூறியதாவது: ''பெங்களூர் உள்பட கர்நாடகாவில் அரை ஹெல்மெட் (Half Helmet) தடை செய்யும் திட்டம் உள்ளது'' என்றார்.
Half Helemts என்பது தலையின் மேல்பகுதியை மட்டுமே மூடும். மற்றபடி முகம், கன்னம், காது, கழுத்து உள்ளிட்டவற்றிற்கு எந்த பாதுகாப்பையும் அளிக்காது. இதனால் முழு ஹெல்மெட்டை ஒப்பிடும்போது அரை ஹெல்மெட்டின் விலை குறைவாக இருக்கும்.
இந்த விலை குறைப்பால் பலரும் இந்த அரை ஹெல்மெட்டை பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விபத்து நிகழும்போது அரை ஹெல்மெட் அணிந்தால் முகத்தில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதனை தடை செய்ய உள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது டூவீலர் ஓட்டுவோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் அரை ஹெல்மெட் அணிய முடியாது. அதற்கு பதிலாக முழு ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும்.
மேலும் அமைச்சர் பைரதி சுரேஷ் கூறுகையில், ''மாநிலத்தில் ஓலா, ஊபர் உள்பட அனைத்து டாக்ஸிகளிலும் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். இதனை கட்டாயமாக்குவதற்கான விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பயணிகள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சுரண்டப்படுவதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே டாக்ஸிகள் பயணிகளிடம் இருந்து பெற வேண்டும். இதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வியட்நாமை தலைமையிடமாக கொண்ட 'கிரீன் எஸ்எம்' நிறுவனத்தின் 100 டாக்ஸிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட உத்தரவு வரும்வரை புதிதாக இந்த டாக்ஸிகள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
