சமூகவலைதளங்களில் அவதூறு.. கோர்ட்டுக்கு போன ரோகிணி சிந்தூரி.. ரூபாவுக்கு தடை விதிக்கப்படுகிறதா?
சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட ரூபா ஐபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறதா
பெங்களூர்: தனக்கு எதிரான கருத்துகளை சமூகவலைதளங்களில் பரப்ப ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு தடை விதிக்கக் கோரி ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு அறநிலையத் துறை கமிஷனராக இருந்தவர் ரோகிணி சிந்தூரி (39).
இவர் மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் அமைச்சர் சா.ரா.ரமேஷ் எம்எல்ஏ மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சா.ரா. மகேஷ், ரோகிணி சிந்தூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆத்திரமிக்கவில்லை
அதில் சா.ரா.மகேஷ் அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்த போது அரசு கட்டடத்தில் விதிமுறைகளை மீறி ரோகிணி சிந்தூர் நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ரோகிணி சிந்தூரி விவகாரத்தை சா.ரா.ரமேஷ் எழுப்பியிருந்தார்.

ரோகிணி சிந்தூரி
இந்த விவகாரங்கள் ரோகிணி சிந்தூரிக்கு பெரம் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து முன்னாள் முதல்வர் குமாரசாமி , மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் மூலமாக சா.ரா.மகேஷை சந்தித்து ரோகிணி சிந்தூரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதை சா.ரா.மகேஷும் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது ஐபிஎஸ் அதிகாரியான ரூபா 19 குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

விசாரணை
மேலும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தனது முகநூல் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி மீது ரூபா குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது முகநூலில் ரோகிணி சிந்தூரிக்கு எதிராக ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் ஐஏஎஸ் அதிகாரி டிகே ரவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடன் பணியாற்றியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். டிகே ரவி எல்லை தாண்டி இருந்தால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவரது செல்போன் எண் மற்றும் வாட்ஸ் ஆப்பை பிளாக் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது பிளாக் செய்யாமல் இப்போது பிளாக் செய்திருப்பதன் காரணம் என்ன என 19 குற்றச்சாட்டுகளை ரூபா முன் வைத்திருந்தார்.

ரோகிணியால் ரூபாவுக்கு பிரச்சினை
தயவு செய்து என் போராட்டத்திற்கு பெண்கள் குரல் கொடுங்கள். அவரால் கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இறந்தார். தமிழகத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி இறந்தார். கர்நாடகாவில் ஒரு ஐஏஎஸ் தம்பதி விவாகரத்து பெற்றனர் என குறிப்பிட்டிருந்தார். ரூபாவின் இந்த பதிவை வைத்து பார்த்தோமேயானால் அவருடைய குடும்பத்திலும் ரோகிணியால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ரூபாவுக்கு தடை
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் என்னை பற்றி கருத்து வெளியிட ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூர் 74 ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ரோகிணி சார்பில் அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது ரோகிணி தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றிய ரூபா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

மொபைல் போன் எண்
என் மனுதாரரின் மொபைல் போனில் இருந்த சில புகைப்படங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளன. அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் ரூபா வெளியிட்டதும் ரோகிணியின் மொபைல் எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு ஏராளமானோர் போன் செய்து வருகிறார்கள். ரூபா மீது தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவையும் மீறி ரூபா சமூகவலைதளங்களில் ரோகிணி மீது அவதூறு பரப்பி வருகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். ரூபாவுக்கு தடை விதிப்பது குறித்து இன்று உத்தரவிடப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications