இளம்பெண்களுடன் உல்லாசம்.. இஸ்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர் செய்த செயல்
பெங்களூர்: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததோடு மட்டுமின்றி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜயாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பணியாற்றுவதாக 'பயோ'வில் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி யாருக்காவது இஸ்ரோவில் வேலை வேண்டும் என்றால் தன்னை தொடர்பு கொள்ளலாம். இஸ்ரோவில் பணியில் சேர்வது பற்றியும், வேலைவாய்ப்பு குறித்தும் வழிக்காட்டுவதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் ஈரண்ணா படிகரை தொடர்பு கொண்டுள்ளனர். இளைஞர்கள், இளம்பெண்கள் என்று பலரும் அவருக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பி வேலை கேட்டுள்ளனர். இதனை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இஸ்ரோவில் பணி வாங்கி தருகிறேன் என்று இளம்பெண்களிடம் நம்பிக்கை வார்த்தைகள் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சிலரிடம் பணமும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர சில பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஈரண்ணா படிகர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சில பெண்கள் அவரிடம் வேலை கேட்டு அழுத்தம் கொடுத்தனர். ஈரண்ணா அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அதன்பிறகு பலரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஈரண்ணா வேறு வழியின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்தார்.
பிறகு செல்போன் எண்ணையும் மாற்றினார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை பெண்கள் உணர்ந்தனர்.இதுப்றி அவர்கள் போலீசில் புகார் ளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதிரடியாக கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஈரண்ணாவிற்கு ஏராளமாக கடன் இருப்பதும், இந்த கடனை திரும்ப வழங்க அவர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போன், ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன. செல்போனில் பல பெண்களின் ஆபாசபடங்கள் இருப்பது தெரியவந்தது. இளம்பெண்களுடன் ஆபாசமாக வீடியோ கால் பேசியதும், அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரண்ணா பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
