சம்பாதிச்சி கொட்டுறது பெங்களூர்.. ரோடு கூட போடாம பணத்தை பதுக்குது மோடி அரசு- கர்நாடக அமைச்சர் கோபம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாட்டின் முக்கியமான ஐடி மையமாக விளங்கும் பெங்களூரில் இருந்து மத்திய அரசுக்கு பெருமளவில் வரி வருவாய் செல்கிறது. ஆனால், அதற்கு ஏற்ற அளவில் மத்திய அரசின் நிதியுதவியும் திட்டங்களும் பெங்களூருக்கு கிடைப்பதில்லை என்று கர்நாடகாவின் கிரேட்டர் பெங்களூர் டெவலப்மெண்ட் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் முக்கியமான ஐடி நகரமாக பெங்களூர் இருக்கிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என சொல்லும் அளவுக்கு தொழில்நுட்ப துறையில் பெங்களூர் சிறந்து விளங்குகிறது. இருப்பினும், பெங்களூரின் உள்கட்டமைப்பு குறித்து தொடர்ந்து விமர்சனம் இருக்கிறது. குறிப்பாக சாலைகள், டிராபிக் பிரச்சினை உச்சத்தில் இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன.

Bangalore development Bangalore karnataka

கர்நாடக அமைச்சர்

இதற்கிடையே பெங்களூரில் இருந்து மத்திய அரசுக்கு அதிக வருமானம் சென்றாலும் கூட மத்திய அரசு உதவிகள் பெங்களூருக்கு கிடைப்பதில்லை என கிரேட்டர் பெங்களூர் டெவலப்மெண்ட் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறியுள்ளார். பெங்களூரின் வர்தூர், வைட்ஃபீல்டு, பெல்லந்தூர் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி, ஐடி காரிடர் மற்றும் வெளிவட்ட சாலையை சுற்றியுள்ள பகுதிகள் நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.6,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று நிதி குழு பரிந்துரைத்ததாக அமைச்சர் கவுடா தெரிவித்தார். ஆனால் அந்த நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசின் வரி பகிர்விலும் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாக அவர் கூறினார். மத்திய அரசின் வருவாயில் கர்நாடகா மிக பெரிய பங்களிப்பை வழங்கும் போதிலும், வரி பகிர்வில் கிடைக்கும் தொகை குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர்மட்ட சாலைகள்

அவர் மேலும், "முந்தைய யுபிஏ காலத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் பெங்களூரை சுற்றி மூன்று உயர்மட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் பகுதி, தும்கூர் சாலை மற்றும் விமான நிலைய சாலை ஆகிய பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை பெங்களூர் வளர்ச்சிக்கு இன்றளவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் பெங்களூரை சுற்றி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஒரு உயர்மட்ட சாலை கூட அமைக்கப்படவில்லை.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

பெங்களூரை சுற்றி அமைக்கப்பட்டு வரும் 288 கிமீ நீளமான சாட்டிலைட் நகர சுற்றுச்சாலை திட்டத்திலும் மத்திய அரசின் ஆதரவு போதுமானதாக இல்லை. இந்த திட்டத்தின் ஒரு பகுதி நிறைவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பணிகள் நகராமல் இருக்கிறது.. இதையெல்லாம் வைத்தே பெங்களூரின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று சொல்கிறோம்.

பெங்களூருவில் இருந்து பெருமளவு கார்பரேட் வரியும் வருமான வரியும் மத்திய அரசுக்கு நேரடியாக செல்கிறது. குறிப்பாக வைட்ஃபீல்டு, சர்ஜாபூர் போன்ற பகுதிகள் பெங்களூருவுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் வருவாய் மற்றும் செல்வத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக அந்நிய செலாவணியை ஈட்டுவதில் பெங்களூர் நாட்டின் மிக பெரிய மையங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த வருவாயில் இருந்து பெங்களூருக்கு உரிய பங்கு திரும்ப கிடைப்பதில்லை.

வருமான பகிர்வு

நாம் ரூ.100 வரி செலுத்தினால், சுமார் ரூ.15 அல்லது ரூ.16 மட்டுமே திரும்ப கிடைக்கிறது. அதே நேரத்தில், சில மாநிலங்களுக்கு ரூ.100க்கு ரூ.300, ரூ.400, ரூ.500 வரை கிடைக்கிறது. பெங்களூர் கர்நாடகாவுக்கான வளர்ச்சி இயந்திரம் மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமான நகரம் என்பதால், அதன் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு மத்திய அரசு கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை" என்றும் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+