பெண் விடுதலைக்கான காலமிது.. கர்நாடகாவில் ஹிஜாப்புக்கான தடை தொடரும்.. அமைச்சர் நாகேஷ் பரபரப்பு
பெங்களூர்: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடரும் என அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: பெண்களின் விடுதலை பற்றி பேசும் காலம் இது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக ஹைகோர்ட் தடை விதித்த உத்தரவு தொடரும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட எந்த கல்வி நிலையங்களிலும் எந்தஒரு மத அடையாள சின்னங்களுக்கும் அனுமதியில்லை என தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிவது
கர்நாடகா கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக இந்துத்துவ மாணவர்கள் ஹிஜாப்பிற்கு தடை விதிக்க கோரி பிரச்சினை செய்தனர். ஒரு கல்லூரிக்கு வந்த மாணவியை ஹிஜாப் அணிந்து கொண்டு உள்ளே விட மாட்டோம் என இந்துத்துவ மாணவர்கள் கூறியதால் பரபரப்பு எழுந்தது. மேலும் அவர்கள் காவி நிற ஸ்கார்ஃபை கழுத்தில் அணிந்து வந்ததும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பள்ளி சீருடை
இனால் கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு சில நாட்கள் விடுப்பு விடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வர வேண்டும் என கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

10 நாட்கள் விசாரணை
அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

இரு வேறு தீர்ப்புகள்
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று வெளியிட்டது. அதில் ஹிஜாப் தடை செல்லும் என்றும் ஹிஜாப் அணிய கர்நாடகா நீதிமன்றத்தின் தடை செல்லாது என்றும் இரு வேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அறிவித்தனர். இதனால் இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications