ரூ.50 லட்சம்.. வேட்புமனு வாபஸ் பெற ஜேடிஎஸ் வேட்பாளருக்கு பாஜக அமைச்சர் சோமண்ணா ஆபர்? யார் தெரியுதா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து பாஜக அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகிறார். இதேபோல் சாம்ராஜ்நகர் தொகுதியில் சோமண்ணா களமிறங்கி உள்ள நிலையில் தோல்வி பயத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என அவர் ஜேடிஎஸ் வேட்பாளரிடம் வற்புறுத்தியதாக ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. மேலும் மனுவை வாபஸ் பெறுவதற்காக அவர் ரூ.50 லட்சம் மற்றும் கார் தருகிறேன் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக உள்ள சோமண்ணா பாஜக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சி தலைவராக உள்ள மாஜி முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து சோமண்ணாவை மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் பாஜக களமிறக்கி உள்ளது. அதேபோல் சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வரை எதிர்ப்பதால் அவருக்கு 2 இடங்களில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.
சோமண்ணா தற்போது பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இதுதான் அவரது சொந்த தொகுதியாகும். ஆனால் அவர் இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட சொந்த தொகுதியான கோவிந்தராஜ் நகர் தொகுதியை கைவிட்டுவிட்டார். வருணா தொகுதி என்பது சித்தராமையாவின் சொந்த தொகுதியாகும். இங்கு சோமண்ணா வெற்றி பெறுவது சிரமம் என கூறப்படுகிறது.
அதேபோல் சாம்ராஜ் நகர் தொகுதியில் அவர் முதல்முறையாக போட்டியிடுகிறார். இதனால் அங்கும் அவரது வெற்றி என்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இருப்பினும் சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சோமண்ணா செயல்பட்ட நிலையில் அது தனக்கு கைக்கொடுக்கும் என சோமண்ணா நம்புகிறார்.
இந்நிலையில் தான் 2 தொகுதிகளிலும் சோமண்ணா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வருணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா, அமைச்சர் சோமண்ணா இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் சாம்ராஜ் நகர் தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் வேட்பாளர் புட்டரங்க செட்டி, ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமி மற்றும் பாஜகவின் சோமண்ணா ஆகியோர் இடையே போட்டி உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வேட்புமனுவை வாபஸ் பெற கடைசிநாளான கடந்த 24ம் தேதி அமைச்சர் சோமண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமியின் மனுவை வாபஸ்பெற வலியுறுத்தி பேரம் பேசியதாக கூறி ஆடியோ பரப்பப்பட்டு வருகிறது. அந்த ஆடியோ அமைச்சர் சோமண்ணா மற்றும் மல்லிகார்ஜூன சாமிக்கு இடையே நடந்த உரையாடல் என கூறப்படுகிறது.
அதில், மல்லிகார்ஜூன சாமியிடம் ‛‛நீங்கள் தேர்தலில் மனுவை வாபஸ் பெற்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என கூறப்படுகிறது. அதற்கு மல்லிகார்ஜூன சாமி, ‛‛நான் வாபஸ் பெறமாட்டேன்'' என்கிறார். இதையடுத்து, ‛‛யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம். வேட்புமனுவை மட்டும் திரும்ப பெறுங்கள். உங்களின் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன். இந்த உறுதியை நான் உப்பார் கோவிலின் உள்ளே இருந்தபடி கொடுக்கிறேன்'' எனும் வகையில் உரையாடல் உள்ளது.
இது கர்நாடகா அரசியலில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சோமண்ணா இதுபற்றி எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும் சாம்ராஜ்நகர் தொகுதி ஜேடிஎஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன சாமி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் சோமண்ணா வேட்புமனுவை வாபஸ் வாங்கும்படி தன்னிடம் பேரம் பேசியதாக குற்றம்சாட்டி உள்ளது.
இதுபற்றி மல்லிகார்ஜூன சாமி கூறுகையில், ‛‛சோமண்ணா எனக்கு போன் செய்து வேட்புமனுவை வாபஸ் பெற கூறினார். நான் மறுத்துவிட்டேன். அவர் என்னுடன் பேசியது உண்மை தான். இந்த தேர்தலில் நான் சோமண்ணாவுக்கு எதிராக வெற்றி பெறுவேன். ஏனென்றால் அமைச்சர் சோமண்ணா வெளிநபராவார்'' என தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேளையில் ரூ.50 லட்சம் மற்றும் அரசு கார் வழங்குவதாகவும் சோமண்ணா, மல்லிகார்ஜூன சாமிக்கு ஆபர் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பாளராக களமிறங்கி உள்ள மல்லிகார்ஜூன சாமி கடந்த முறையும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 7 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார். இந்த முறையும் அவர் போட்டியிடும்பட்சத்தில் அவர் ஓட்டுக்களை பிரிப்பார். இதனால் தோல்வி பயத்தில் அமைச்சர் சோமண்ணா மல்லிகார்ஜூன சாமியிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications