“பீர்” அம்பேத்கரா? தலித்துகளை இழிவுபடுத்தி பல்கலையில் “ஜாதி வெறி” நாடகம்! போலீஸ் வழக்குப்பதிவு
தலித்துகள், அம்பேத்கரையும் தரக்குறைவாக விமர்சித்து பல்கலைக்கழக விழா மேடையில் நாடகம் அரங்கேற்றியது தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
பெங்களூரு: தலித் சமுதாயத்தினரையும், இடஒதுக்கீட்டையும், சட்டமேதை அம்பேத்கரையும் தரக்குறைவாக விமர்சித்து பல்கலைக்கழக விழா மேடையில் நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இது தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் அவரது சிலைகள் தகர்க்கப்படுவதும் சேதப்படுத்துவதும் தொடர்கிறது.
குறிப்பாக அறிவை விசாலமானதாக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே சாதி, மத வெறி பரப்பப்படுவதுடன் ஆசிரியர்களே மாணவர்களிடம் சாதி, மத பாகுபாட்டுடன் நடந்துகொள்ளும் நிகழ்வுகளும் உள்ளது.

இளைஞர் திருவிழா
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வாரமாக இளைஞர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஆடல் பாடல், நாடகம், மைம், மிமிக்ரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறையைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் கடந்த 6 ஆம் தேதி நகைச்சுவை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது.

ஜாதி வெறி நாடகம்
இந்த நாடகத்தில் பேசப்பட்ட வாசகங்கள், பின்னணி குரலில் ஒலித்த வசனங்கள் என அனைத்திலும் ஜாதி வெறியே நிரம்பி இருந்தது. குறிப்பாக அதில் பட்டியலின மக்களையும், அண்ணல் அம்பேத்கரையும் இழிவுபடுத்தும் வகையிலும், இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையிலும் வசனங்கள் பேசப்பட்டன. குறிப்பாக நகைச்சுவை என்ற பெயரில் அம்பேத்கரின் இனிஷியலில் வரும் "பி.ஆர்" ஐ "பீர்" என தவறான அர்த்தம் தரும் வகையில் உச்சரித்தனர்.

கடும் எதிர்ப்பு
இது தவறு என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மாணவர்கள் சாதாரணமாக இந்த நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்க, கீழே இருந்த ஒரு தரப்பினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதே நேரம் மேடையில் மாணவர்கள் ஜாதி வெறியுடன் தலித் மக்கள், அம்பேத்கர், இடஒதுக்கீட்டை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதை உணர்ந்த மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கேயே எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
நடுவிலேயே நாடகம் நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கிருந்த பார்வையாளர்கள் இப்படிப்பட்ட ஜாதி வெறியை தூண்டும் நாடகத்தில் நடித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதற்கு அனுமதி கொடுத்த ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பினார்கள். அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் சஸ்பெண்ட்
இதில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு உள்ளார்கள். இதுதொடர்பாக கர்நாடகா மற்றும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்த ஜெயின் பல்கலைக்கழகம், நாடகம் போட்ட 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து இருக்கிறது.
|
போலீஸ் வழக்குப்பதிவு
இந்த நிலையில் இது தொடர்பாக குடகு மாவட்டம் சித்தபுரா காவல்நிலையத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக ட்விட்டரில் பெங்களூரு நகர காவல்துறை விளக்கம் கொடுத்து உள்ளது.

போராட்டம்
ஆனால், இதுவரை நாடகத்தில் நடித்த எந்த மாணவரையும் காவல்துறை கைது செய்யவில்லை. அதே நேரம் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் மாணவர்களை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications